தமிழ் மொழியை ஒதுக்கி தள்ளிய விஜயின் வாரிசு திரைப்படம்..,இணையத்தில் வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!!

0
தமிழ் மொழியை ஒதுக்கி தள்ளிய விஜயின் வாரிசு திரைப்படம்..,இணையத்தில் வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!!
தமிழ் மொழியை ஒதுக்கி தள்ளிய விஜயின் வாரிசு திரைப்படம்..,இணையத்தில் வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!!

தெலுங்கு இயக்குனர் வம்சி படைப்பில் தளபதி விஜய் நடித்த வாரிசு திரைப்படம் குறித்து முக்கிய தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

வாரிசு திரைப்படம்:

கோலிவுட்டில் அடுத்த சூப்பர் ஸ்டாராக ரசிகர்களால் கொண்டாடி வரும் நடிகர் தான் தளபதி விஜய். இவர் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்துள்ளார். அதுபோக விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க, சரத்குமார், பிரபு, பிரகாஷ்ராஜ், குஷ்பு, சங்கீதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கடந்த மூன்று வாரங்களாக படத்தோட அப்டேட்டை படக்குழுவினர் வெளியிட்ட வண்ணம் இருக்கின்றனர்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அந்த வகையில் நேற்று செகண்ட் சிங்கிள் சாங் போஸ்டரை வெளியிட்டனர். தற்போது இது குறித்து ஒரு கண்டனம் எழுந்து வருகிறது. அதாவது விஜய் நடிக்கும் வாரிசு திரைப்படம் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்க வில்லை என்று நெட்டிசன்கள் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். அதற்கு காரணம் வாரிசு குறித்து வெளியாகும் போஸ்டர்களில் தமிழ் எழுத்துக்களை காண முடியவில்லை என்றும் அதிகமாக ஆங்கிலம் மட்டுமே இருக்கிறது என்று கூறுகின்றனர்.

அர்னவால் ஏமாற்றப்பட்டாலும் அடுத்த கட்டத்திற்கு உயர்ந்த திவ்யா ஸ்ரீதர்.., இன்ஸ்டாவில் வைரலாகும் வீடியோ கிளிப்!!

மேலும் இப்படத்தின் இயக்குனர் தெலுங்கு என்பதால் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இப்படி கேள்விகளை எழுப்பும் நெட்டிசன்களுக்கு நேற்று வெளியான போஸ்டரில் ” தீ ” என்பது தமிழ் எழுத்துக்களாக தெரியவில்லையா என்று ரசிகர்கள் பதில் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதுமட்டுமின்றி நாளை வெளியாகும் செகண்ட் சிங்கிள் பாடலை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here