“தளபதி 68” படத்தோட டைரக்டர் இவரா? அப்ப அட்லீக்கு டாடா தானா.., ரசிகர்கள் Shock!!!

0
"தளபதி 68" படத்தோட டைரக்டர் இவரா? அப்ப அட்லீக்கு டாடா தானா.., ரசிகர்கள் Shock!!!

நடிகர் விஜய் தற்போது லியோ திரைப்படத்தில் பிசியாக இருந்து வரும் நிலையில் அவர் அடுத்த நடிக்க இருக்கும் தளபதி 68 படத்தை குறித்து இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

தளபதி 68:

தென்னிந்திய தமிழ் சினிமாவில் மோஸ்ட் வான்டட் ஹீரோவாக கொடிகட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். தற்போது சோசியல் மீடியாவில் எந்த பக்கம் சென்றாலும் மக்களுக்கு பேசும் டாப்பிக்காக இருந்து வரும் செய்தி என்றால் அது தளபதி நடிக்கும் லியோ-வை பற்றி தான். இப்படத்தை சென்சேஷன் இயக்குனரான லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். அதுபோக பல முக்கிய நட்சத்திரங்கள் ரவுண்டு கட்டி நடித்து வரும் நிலையில், இந்த திரைப்படம் வருகிற அக்டோபர் மாதம் 19ம் தேதி ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கிறது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இப்படத்தை தொடர்ந்து தளபதி 68 யை யார் இயக்க போகிறார்கள் என்ற கேள்வி ரசிகர்கள் பலருக்கும் இருந்து வருகிறது. சமீபத்தில் அட்லீ இயக்க இருக்கிறார் என்று தகவல் வெளியாகி வைரலானது. இதனால் தளபதி ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஏனென்றால் அட்லீ விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் என தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்துள்ளார். தற்போது ஒரு செய்தி இணையத்தை புரட்டி போட்டு கொண்டிருக்கிறது. அதாவது தளபதி 68 யை அட்லீ இயக்க வில்லையாம்.,

‘பாரதி கண்ணம்மா’ சீரியல் பிரபலம் திடீர் மரணம்.., தூக்கத்தில் பிரிந்த உயிர்.., சோகத்தில் மூழ்கிய சின்னத்திரை!!

அஜித்தை வைத்து மங்காத்தா, சிம்புவை வைத்து மாநாடு போன்ற சூப்பர் டூப்பர் ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் வெங்கட் பிரபு தான் இயக்க போகிறாராம். இவர் இயக்கப் போகிறார் என்றால் கண்டிப்பாக யுவன் சங்கர் ராஜா தான் இசையமைப்பாளர் என்று ரசிகர்கள் சந்தோஷத்தில் ஆர்ப்பரித்து வருகின்றனர். ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தளபதி 68 யை இயக்குவது அட்லீயா? வெங்கட் பிரபுவா? இல்ல வேற யாருமா? என்று ரசிகர்கள் குழம்பி போய் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here