தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை வெளுத்து வாங்கும்.., மீனவர்களுக்கு கடும் எச்சரிக்கை!!

0
தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை வெளுத்து வாங்கும்.., மீனவர்களுக்கு கடும் எச்சரிக்கை!!
தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை வெளுத்து வாங்கும்.., மீனவர்களுக்கு கடும் எச்சரிக்கை!!

தொடர்ந்து மாறி வரும் பருவநிலை காரணமாக, வங்கக்கடல் பகுதியில் நேற்று அதிதீவிரமாக “மோகா” புயல் வீசியது. இந்த புயலானது நேற்று(14.5.2023) மதியம் தென்கிழக்கு வங்கதேசம் மற்றும் வடக்கு மியான்மர் ஆகிய பகுதிகளில் கரையை கடந்தது. இதனால், மேற்கு திசை காற்று மற்றும் வெப்பச்சலனம் ஆகியவற்றின் காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 5 நாட்களுக்கு வானிலையில் ஏற்படும் மாற்றம் குறித்து ஆராய்ச்சி மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இந்த அறிக்கையில், இன்று (15.5.2023) முதல் நாளை வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை விட 2-3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரித்து, 41 டிகிரி வரை வெயில் கொளுத்த கூடும். இருப்பினும், மேற்குறிப்பிட்ட பகுதிகளில் ஓரிரு இடங்களில் மட்டும் வரும் 17ம் தேதி வரை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கும், 18 மற்றும் 19ம் தேதிகளிலிலும் லேசான மழைக்கும் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது. ஆனால், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடனே காணப்படும் எனவும், வெப்பநிலையானது 29 முதல் 41 டிகிரி வரை இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இனி எல்லா ஸ்மார்ட் போனிலும் இந்த வசதி இருக்க வேண்டும் – மத்திய அரசாங்கம் அதிரடி முடிவு!!

மேலும், மீனவர்களுக்கு எச்சரிக்கை அளிக்கும் வகையில், தமிழக கடேலாரப்பகுதிகள், குமரிக்கடல், மன்னார் வளைகுடா மற்றும் இலங்கை ஆகிய கடேலாரப்பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் பலத்த காற்று விசக்கூடும் என கூறப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, தெற்கு அரபிக்கடலின் மத்திய பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று இன்று (15) முதல் வரும் 17ம் தேதி வரை வீசக்கூடும் என்பதால் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here