என்னது தளபதிக்கு டைவர்ஸ் ஆயிடுச்சா? அடுத்த பார்ட்னர் இந்த பிரபலமா.., விக்கிபீடியாவால் எழுந்த புதிய சர்ச்சை!!

0
என்னது தளபதிக்கு டைவர்ஸ் ஆயிடுச்சா? அடுத்த பார்ட்னர் இந்த பிரபலமா.., விக்கிபீடியாவால் எழுந்த புதிய சர்ச்சை!!
என்னது தளபதிக்கு டைவர்ஸ் ஆயிடுச்சா? அடுத்த பார்ட்னர் இந்த பிரபலமா.., விக்கிபீடியாவால் எழுந்த புதிய சர்ச்சை!!

நடிகர் விஜய் குறித்து விக்கிபீடியாவில் தவறான கருத்துக்களை பகிர்ந்து சில மர்ம ஆசாமிகள் வன்மத்தை கக்கியுள்ளதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய்:

தென்னிந்திய தமிழ் சினிமாவில் அடுத்த சூப்பர் ஸ்டாராக ஜொலித்து நிற்பவர் தான் நடிகர் விஜய். . தற்போது தெலுங்கு இயக்குனர் வம்சி படைப்பில் உருவான வாரிசு திரைப்படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் ஆடியோ லாஞ்சு கோலாகலமாக நடைபெற்றது. அதில் ரசிகர்களுக்காக விஜய் தானாகவே முன் வந்து ரஞ்சிதமே சாங் பாடி, ஆடி அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

அதன் பின்னர் எந்த ஒரு அப்டேட்டும் வெளியே வராமல் இருந்த நிலையில், தற்போது ரசிகர்களை குஷி படுத்தும் விதமாக இன்று மாலை 5 மணிக்கு வாரிசு படத்தின் டிரைலர் வெளியாக இருக்கிறது. இந்த சந்தோஷத்தை கெடுக்கும் விதமாக விஜய் விக்கிபீடியாவில் சில மர்ம ஆசாமிகள் வன்மத்தை கக்கியுள்ளனர்.

விஜய் டிவி சீரியலில் இருந்து விலகிய பிரபலம்., அவருக்கு பதில் இவர்தான்! அப்ப சன் டிவிக்கு டாடா வா?

அதாவது விஜய்யின் விக்கிபிடியாவில் விஜய்யும் அவருடைய மனைவி சங்கீதா சொர்ணலிங்கம் இருவரும் டைவர்ஸ் வாங்கி பிரிந்து விட்டதாக எடிட் செய்துள்ளனர். அதுமட்டுமின்றி கீர்த்தி சுரேஷை அடுத்த பார்ட்னராக சேர இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்கள். இதை பார்த்த தளபதி ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் விஜய்யின் வளர்ச்சி பிடிக்காமல் சிலர் அவர் மீது இப்படிப்பட்ட வன்மத்தை கக்கி வருகிறார்கள். தற்போது சங்கீதா லண்டனில் மகன் மற்றும் மகளுடன் இந்த வருட வெக்கேசனை கொண்டாடி வருகிறார். அதுமட்டுமின்றி ஷூட்டிங் பணிகளை முடித்துவிட்டு விஜய்யும் லண்டன் செல்ல இருப்பதாக சொல்லப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here