ஆனியன் ஆம்லேட் தெரியும்?? அது என்ன பீர்கங்காய் ஆம்லேட்?? Healthy டிஷ் இதோ உங்களுக்காக!!

0
ஆனியன் ஆம்லேட் தெரியும்?? அது என்ன பீர்கங்காய் ஆம்லேட்?? Healthy டிஷ் இதோ உங்களுக்காக!!
ஆனியன் ஆம்லேட் தெரியும்?? அது என்ன பீர்கங்காய் ஆம்லேட்?? Healthy டிஷ் இதோ உங்களுக்காக!!

பீர்க்கங்காயில் ஏகப்பட்ட மருத்துவ குணம் இருப்பதால் இதை நம் அன்றாட உணவில் சேர்த்து கொள்ளும் படி மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆனால் சிலர் இந்த காயை விரும்புவதே கிடையாது. எனவே அனைவருக்கும் பிடித்தமாதிரி பீர்க்கங்காயை வைத்து ஒரு வித்தியாசமான ரெசிபி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
  • பீர்க்கங்காய் – 1/2 கிலோ
  • முட்டை – 2
  • மிளகு தூள் – 1 டீஸ்பூன்
  • மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
  • மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு
  • கொத்த மல்லி – சிறிதளவு
  • பச்சை மிளகாய் – 3
  • வெங்காயம் – 2
  • எண்ணெய் – 3 டீஸ்பூன்
  • கறிவேப்பிலை – சிறிதளவு

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

செய்முறை விளக்கம்

பீர்க்கங்காய் முட்டை பொரியல் செய்வதற்கு 1/2 கிலோ பீர்க்கங்காயை தோல் சீவி நறுக்கி கொள்ளவும். பின் ஒரு கடாய் எடுத்து அடுப்பில் வைத்து சிறிதளவு எண்ணெய் ஊற்றி, சிறிதளவு கடுகு கறிவேப்பிலை வெங்காயம் சேர்த்து தாளித்து கொள்ளவும். அத்துடன் நாம் நறுக்கி வைத்துள்ள பீர்க்கங்காய் சேர்த்து சிறிது நிமிடம் வதக்கவும்.

பின் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து கிண்டி விடவும். அத்துடன் 2 முட்டைகளை உடைத்து அதில் சேர்த்துக்கொள்ளவும். இப்பொழுது அடுப்பை குறைத்து வைத்து நன்றாக வேகவிடவும். இறுதியில் மிளகு தூள் மற்றும் கொத்த மல்லி இலைகள் சேர்த்து அடுப்பை ஆப் செய்து இறக்கி விடவும். இப்பொழுது நமக்கு சுவையான பீர்க்கங்காய் முட்டை பொரியல் .தயார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here