மீண்டும் சீரியலில் ரீ என்ட்ரி கொடுக்கும் வேணு அரவிந்த் – அதுவும் இந்த சீரியலா? அப்ப டிஆர்பி எகிற போகுது!!

0
மீண்டும் சீரியலில் ரீ என்ட்ரி கொடுக்கும் வேணு அரவிந்த் - அதுவும் இந்த சீரியலா? அப்ப டிஆர்பி எகிற போகுது!!
மீண்டும் சீரியலில் ரீ என்ட்ரி கொடுக்கும் வேணு அரவிந்த் - அதுவும் இந்த சீரியலா? அப்ப டிஆர்பி எகிற போகுது!!

சன் டிவியில் ஒளிபரப்பான வாணி ராணி சீரியலில் நடித்த வேணு அரவிந்த் சில வருடங்களாக உடல் நிலை சரியில்லாமல் இருந்த நிலையில் தற்போது மீண்டும் சீரியலில் அவர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் வேணு அரவிந்த்:

சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான செல்வி, வாணி ராணி, சந்திரகுமாரி போன்ற சீரியலில் நடித்து ரசிகர்கள் மத்தியில் ரீச்சானவர் தான் நடிகர் வேணு அரவிந்த். இவர் சின்னத்திரை மட்டுமின்றி வெள்ளித்திரையிலும் தடம் பதித்துள்ளார். அந்த வகையில் ஹாரிஸ் கல்யாண் நடித்த ஓ மணப்பெண்ணே படத்தில் அவருக்கு அப்பாவாக நடித்திருந்தார். இப்படி பிசியாக இருந்து வந்த இவர் சில மாதங்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் கோமா நிலையில் இருப்பதாகவும் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் சில தகவல்கள் வெளியாகி வைரலானது. இதையடுத்து அவர் உடல்நலம் குறித்து அவரே விளக்கம் ஒன்றை கொடுத்திருந்தார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்நிலையில் அவர் மீண்டும் சீரியலில் அவர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது நடிகர் வேணு அரவிந்த் அதிகமாக ராதிகா சரத்குமார் தயாரித்து நடித்த சீரியல்களிலே நடித்துள்ளார். தற்போது ராதிகா தயாரிப்பில் விஜய் டிவியில் கிழக்கு வாசல் சீரியல் ஒளிபரப்பாக இருக்கிறது. அந்த சீரியலில் ராதிகாவுக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே இவரும் ராதிகாவும் நடித்த வாணி ராணி சீரியல் வேற லெவலில் ஹிட்டானது. அது போல இந்த சீரியலும் ஹிட் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பல வருடங்களுக்கு பிறகு அவர் சீரியலில் நடிக்க இருப்பதை ரசிகர்கள் வரவேற்று வருகிறார்கள்.

கண்ணாடியுடன் மனோ பாலா உடல் தகனம் செய்யப்பட்டது – இதுக்கு பின்னாடி இவ்வளவு விஷயம் இருக்கா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here