சூடுபிடிக்கும் லியோ பட ஷூட்டிங்.., டூயட்டுக்கு ரெடியான விஜய் – த்ரிஷா.., இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!!

0
சூடுபிடிக்கும் லியோ பட ஷூட்டிங்.., டூயட்டுக்கு ரெடியான விஜய் - த்ரிஷா.., இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!!
சூடுபிடிக்கும் லியோ பட ஷூட்டிங்.., டூயட்டுக்கு ரெடியான விஜய் - த்ரிஷா.., இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!!

நடிகர் விஜய் நடிப்பில் விறுவிறுப்பாக உருவாகி வரும் லியோ திரைப்படத்தை குறித்து முக்கியமான அப்டேட் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

லியோ திரைப்படம்:

தமிழ் சினிமாவில் பாக்ஸ் ஆபிஸ் கிங்காக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான வாரிசு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் 300 கோடிக்கு மேல் வசூலித்து வசூல் சாதனை படைத்தது. தற்போது சென்சேஷன் இயக்குனரான லோகேஷ் கனகராஜ் படைப்பில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தில் தீவிரமாக நடித்து வருகிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்தப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முன்னதாக காஷ்மீரில் நடைபெற்று வந்த நிலையில், தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போது விஜய் – திரிஷாவின் டூயட் பாடலொன்று பிரம்மாண்ட செட் அமைத்து படமாக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது நடிகை திரிஷா நடித்த பொன்னியின் செல்வன் 2 வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், தற்போது லியோ ஷூட்டிங்கில் முழு வீச்சில் இறங்கியுள்ளார்.

கண்ணாடியுடன் மனோ பாலா உடல் தகனம் செய்யப்பட்டது – இதுக்கு பின்னாடி இவ்வளவு விஷயம் இருக்கா?

அவர் கலந்து கொண்ட உடனே டூயட் சாங் தான் படமாக்கப்பட்டு வருகிறதாம். தற்போது விஜய்யும், திரிஷாவும் இருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. முன்னதாக லியோ படத்தில் விஜய்யுடன் சிங்கம் ஒன்று படம் முழுவதும் பயணிக்க உள்ளதாக தகவல் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. இப்படி பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த திரைப்படம் வருகிற அக்டோபர் மாதம் 19ம் தேதி வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here