கண்ணாடியுடன் மனோ பாலா உடல் தகனம் செய்யப்பட்டது – இதுக்கு பின்னாடி இவ்வளவு விஷயம் இருக்கா?

0
கண்ணாடியுடன் மனோ பாலா உடல் தகனம் செய்யப்பட்டது - இதுக்கு பின்னாடி இவ்வளவு விஷயம் இருக்கா?
கண்ணாடியுடன் மனோ பாலா உடல் தகனம் செய்யப்பட்டது - இதுக்கு பின்னாடி இவ்வளவு விஷயம் இருக்கா?

தமிழ் சினிமாவில் இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் என ஆல் கிரவுண்டிலும் சிக்ஸர் அடித்தவர் தான் மனோபாலா. தமிழில் கிட்டத்தட்ட 700 படங்களுக்கு மேலாக குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்த இவர் ரஜினி நடித்த ஊர்காவலன், விஜயகாந்த் நடித்த என் புருஷன் தான் எனக்கு மட்டும் தான், பிள்ளை நிலா, சிறை பறவை உள்ளிட்ட 20 படங்களுக்கு மேல் இயக்கியுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இதனை தொடர்ந்து விஜய் டிவியின் பேமஸ் நிகழ்ச்சியான குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனக்கே உரிய பாணியில் கலக்கினார். கடந்த ஜனவரி மாதம் இவருக்கு லேசான மாரடைப்பு ஏற்பட்டதால் ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று அவர் உடல் நலக்குறைவால் காலமானார். அவரின் இறப்புக்கு பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

இந்த ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்?? அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!!!!

இன்று அவரின் உடலை வளசரவாக்கம் மின் மயானத்தில் தகனம் செய்ய ஊர்வலமாக கொண்டு சென்றனர். அப்போது அவருடைய கண்ணாடியை கழட்டாமல் அப்படியே வைத்து தகனம் செய்துள்ளனர். இதற்கு காரணம் மனோ பாலாவின் மனைவி, அவரை எல்லா நேரத்திலும் கண்ணாடியுடன் பார்த்து விட்டோம். அவரின் இறுதி நேரத்திலும் கண்ணாடி அணிந்து தான் செய்ய வேண்டும் என்று அவருடைய மனைவி கேட்டு கொண்டுள்ளாராம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here