கண்ணீர் மல்க கதறி கதறி அழுத வடிவேலு.., மனதை உருக்கிய சம்பவம்!!

0
கண்ணீர் மல்க கதறி கதறி அழுத்த வடிவேலு.., மனதை உருக்கிய சம்பவம்!!
கண்ணீர் மல்க கதறி கதறி அழுத்த வடிவேலு.., மனதை உருக்கிய சம்பவம்!!

கோலிவுட் திரையில் நகைச்சுவை மன்னனாக வலம் வருபவர் தான் நடிகர் வடிவேல். தமிழ் சினிமாவில் எக்கசக்க திரைப்படங்களில் அசத்தலான தனது காமெடி திறமையை வெளிப்படுத்தி வந்த இவர் ரசிகர்கள் மனதில் தனக்கென தனியிடம் பிடித்து இருக்கிறார். மேலும் தனது கெரியரில் இருந்து சிறிது இடைவெளி எடுத்து கொண்ட இவர் ”நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்” என்ற படத்தில் நடித்து திரையுலகுக்கு ரீஎன்ட்ரி கொடுத்திருந்தார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

ஆனால் இப்படம் மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யாத நிலையில் வசூலில் தோல்வியை தழுவியது. இதை தொடர்ந்து தற்போது இவர் சந்திரமுகி படத்தின் 2 ஆம் பாகத்தில் நடித்துள்ளார். மேலும் இவர் நடிகர் உதயநிதியுடன் இணைந்து ‘மாமன்னன்’ திரைப்படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார்.

ச்சே.., தம்பியை காதலிச்சு.., அண்ணானை கல்யாணம் பண்ணி.., காவியாவை நோகடிக்கும் பார்த்திபன்!

இப்படி சினிமாவில் பிஸியாக இருந்து வரும் இவர் இன்று இவரது திரையுலக நண்பரான இயக்குனர் மனோபாலாவின் இறப்பிற்கு கண்ணீர் அஞ்சலி செலுத்த நேரில் வந்துள்ளார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த இவர் ”நடிகர் மனோவின் மரணம் எனக்கு மிகவும் அதிர்ச்சியளித்துள்ளது. இவரின் இறப்பு திரையுலகுக்கு மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்தியுள்ளது” என கண்ணீருடன் மன வேதனையுடன் பேட்டியில் பேசியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here