இந்திய வீரரை பின்னுக்கு தள்ளிய பாகிஸ்தான் வீரர்…, ஐசிசி தரவரிசையில் நிகழ்ந்த அதிரடி மாற்றம்!!

0
இந்திய வீரரை பின்னுக்கு தள்ளிய பாகிஸ்தான் வீரர்..., ஐசிசி தரவரிசையில் நிகழ்ந்த அதிரடி மாற்றம்!!
இந்திய வீரரை பின்னுக்கு தள்ளிய பாகிஸ்தான் வீரர்..., ஐசிசி தரவரிசையில் நிகழ்ந்த அதிரடி மாற்றம்!!

ஐசிசியானது, மூன்று வடிவ தொடர்களிலும் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை புதுப்பித்து வெளியிட்டுள்ளது.

ஐசிசி தரவரிசை:

ஐசிசியானது சர்வதேச கிரிக்கெட் அணிகளுக்கு இடையே நடைபெறும் போட்டிகளில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு ஏற்ப தரவரிசை புதுப்பித்து வெளியிட்டுள்ளது. மூன்று வடிவங்களை கொண்ட இந்த தரவரிசையில், ஒருநாள் தொடருக்கான பேட்ஸ்மேன்களில், பாகிஸ்தானின் ஃபகர் ஜமான், நியூசிலாந்து அணிக்கு எதிராக தொடர்ந்து 117, 180* அதிரடியான சதங்களை விளாசியதன் மூலம், இந்தியாவின் சுப்மன் கில்லை பின்னுக்கு தள்ளி, 784 புள்ளிகளுடன் 2வது இடத்தை பிடித்துள்ளார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இந்த தரவரிசையில், பாகிஸ்தானின் பாபர் அசாம் 887 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரை தொடர்ந்து, இந்திய வீரர்களான, சுப்மன் கில் 4வது, விராட் கோலி 7 வது மற்றும் ரோஹித் சர்மா 9வது என டாப் 10 இடத்தில் உள்ளனர். இதன் பவுலர்களுக்கான தரவரிசையில் ஜோஷ் ஹேசில்வுட் மற்றும் இந்தியாவின் முகமது சிராஜ் முதல் 2 இடங்களில் உள்ளனர்.

“அவ்ளோ வெறி ரசிகர்களுக்கு”…, ஐந்தே நிமிடத்தில் விற்றுத் தீர்ந்த CSK vs MI -போட்டிக்கான டிக்கெட்டுகள்!!

டி20 தொடரின் பேட்டிங்கான தரவரிசையில், சூர்யகுமார் யாதவ் முதலிடத்தை தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டுள்ளார். இதன், பவுலரில் ஆப்கானிஸ்தானின் ரஷித் கான், ஆல் ரவுண்டரில் ஷகிப் அல் ஹசன் நம்பர் 1 ல் உள்ளனர். டெஸ்ட் தொடரில், பேட்ஸ்மேன்களில் மார்னஸ் லாபுசாக்னே, பவுலர்களில் அஷ்வின் மற்றும் ஆல்ரவுண்டரில் ஜடேஜா முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here