அஜித்தை தம்பியா நினைச்சேன்.., ஆனா ஒரு போன் கால் கூட பண்ணல.., கண்கலங்கிய பொன்னம்பலம்!!

0
அஜித்தை தம்பியா நினைச்சேன்.., ஆனா ஒரு போன் கால் கூட பண்ணல.., கண்கலங்கிய பொன்னம்பலம்!!
அஜித்தை தம்பியா நினைச்சேன்.., ஆனா ஒரு போன் கால் கூட பண்ணல.., கண்கலங்கிய பொன்னம்பலம்!!

நடிகர் கபாலி பொன்னம்பலம் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் நடிகர் அஜித் குமார் பற்றி பேசியது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

கபாலி பொன்னம்பலம்:

தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் பிரபல வில்லனாக திகழ்ந்தவர் தான் நடிகர் கபாலி (எ) பொன்னம்பலம். இவர் ரஜினி, கமல், விஜய், அஜித், சரத்குமார் மற்றும் விக்ரம் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுக்கு வில்லனாக நடித்துள்ளார். அதன் பிறகு நடிப்பில் ரெஸ்ட் எடுத்து கொண்ட கபாலி பொன்னம்பலம் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அந்த ஷோவை விட்டு வெளியே வந்த பொன்னம்பலத்திற்கு பட வாய்ப்பு கிடைக்காமல் இருந்த நிலையில், அவரின் உடல்நிலையும் சரியில்லாமல் போனது. இதனால் சமீபத்தில் அவர் சக நடிகர்களிடம் உதவி கேட்ட வீடியோ இணையத்தில் வைரலானது. இந்த நிலையில் பொன்னம்பலம் அண்மையில் நடந்த பேட்டி ஒன்றில் நடிகர் அஜித் குமார் பற்றி பேசியது இணையத்தில் வெளியாகியுள்ளது. அதாவது நான் மருத்துவ செலவுக்கு பணம் இல்லாமல் திண்டாடிய போது நடிகர் சிரஞ்சீவியிடம் help கேட்டு மெசேஜ் செய்தேன்.

சம்பள விஷயத்தில் நயன்தாராவை ஓவர் ட்ராக் செய்யும் மிருணாள் தாக்கூர் .., தெலுங்கு படத்தில் நடிக்க இத்தனை கோடியா?

அடுத்த 10 நிமிடத்தில் எனக்கு கால் செய்து, என்னுடைய உடல்நிலையை விசாரித்து, என்னை ஆந்திராவுக்கு அழைத்தார். ஆனால் என்னுடைய குடும்பம் இங்கே இருக்கிறார்கள் என்று சொன்னேன், அடுத்த நிமிடமே என்னை சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்கு போக சொன்னார். அங்கு சென்ற எனக்கு கிட்டத்தட்ட 45 லட்சம் வரை செலவு செஞ்சு உயிரை காப்பாற்றினார். ஆனால் நடிகர் அஜித்தை எனது தம்பி போல் நினைத்தேன், அவர் தற்போது வரை எனக்கு Call செய்யவில்லை. அவர் மட்டுமின்றி விஜய், விக்ரம் யாரும் எனக்கு கால் பண்ணல என்று கபாலி பொன்னம்பலம் வருத்தப்பட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here