சம்பள விஷயத்தில் நயன்தாராவை ஓவர் ட்ராக் செய்யும் மிருணாள் தாக்கூர் .., தெலுங்கு படத்தில் நடிக்க இத்தனை கோடியா?

0
சம்பள விஷயத்தில் நயன்தாராவை ஓவர் ட்ராக் செய்யும் மிருணாள் தாக்கூர் .., தெலுங்கு படத்தில் நடிக்க இத்தனை கோடியா?

நடிகர் நானி நடிக்க இருக்கும் 30 வது படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை மிருணாள் தாக்கூர் கமிட்டான நிலையில் அவர் சம்பளம் விவரம் குறித்து சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.

நடிகை மிருணாள் தாக்கூர்:

சின்னத்திரையில் அறிமுகமாகி தற்போது வெள்ளித்திரையில் முன்னணி ஹீரோயினாக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகை மிருணாள் தாக்கூர். அவர் ஆரம்பத்தில் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும், கடந்த ஆண்டு துல்கர் சல்மான் நடிப்பில் பான் இந்திய படமாக வெளியாகிய சீதா ராமம் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தன் மூலம் மிருணாள் தாக்கூர் முன்னணி நடிகையாக உயர்ந்துள்ளார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதனை தொடர்ந்து நானி நடிக்கும் 30வது தெலுங்கு படத்தில் ஹீரோயினாக கமிட்டாகியுள்ளார். இந்நிலையில் இப்படத்தில் நடிக்க மிருணாள் தாக்கூர் வாங்கிய சம்பளம் குறித்து இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது நடிகை மிருணாள் தாக்கூர் நானி படத்தில் நடிக்க 6 கோடி சம்பளமாக பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

படப்பிடிபில் இருந்து கண்ணீருடன் சென்ற கங்கன..,காரணம் இதுதான்!!

இதன் மூலம் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகைகள் பட்டியலில் இடம்பெற்றுள்ளார் மிருணாள் தாக்கூர். மேலும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா சம்பளமாக 10 கோடி வாங்கி வரும் நிலையில், அவரை சீக்கிரம் மிருணாள் தாக்கூர் ஓவர் ட்ராக் செய்வார் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here