வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் சிறந்த நினைவுகளை பகிர்ந்த அஸ்வின்…, வைரலாகும் பதிவு இதோ!!

0
வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் சிறந்த நினைவுகளை பகிர்ந்த அஸ்வின்..., வைரலாகும் பதிவு இதோ!!
வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் சிறந்த நினைவுகளை பகிர்ந்த அஸ்வின்..., வைரலாகும் பதிவு இதோ!!

இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின், தனது வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் சில சிறந்த நினைவுகளை பகிர்ந்துள்ளார்.

அஸ்வின்:

இந்திய அணியானது, சமீபத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டிராபியை தொடர்ந்து 4 முறை வென்று புதிய வரலாறு படைந்திருந்தது. இந்த டிராபியில், இந்திய வீரர்கள் பலர், பல முன்னாள் வீரர்களின் சாதனையை முறியடித்தது, புதிய சாதனைகளை படைத்தும் அசத்தி இருந்தனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதில், குறிப்பாக இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் இந்த டிராபியில் மட்டும் 25 விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன் ஆல் ரவுண்டராகவும் சிறப்பாக செயல்பட்டதால், தொடர் நாயகன் விருதை ஜடேஜாவுடன் பகிர்ந்து கொண்டார். மேலும், பார்டர் கவாஸ்கர் டிராபியில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்களுக்கான பட்டியலில் இந்தியாவின் அனில் கும்ப்ளே சாதனை முறியடித்து 114 விக்கெட்டுகளுடன் முதலிடம் பிடித்த இந்திய வீரரானார்.

WPL லில் RCB அணியின் முதல் வெற்றிக்கு பின்னுள்ள ரகசியம்…, முக்கிய பங்கு வகித்த விராட் கோலி!!

இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், பார்டர் கவாஸ்கர் டிராபியுடன் எடுத்துக் கொண்ட போட்டோவை பகிர்ந்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார். இந்த போட்டோவுக்கு கீழ் கேப்சனாக மற்றொரு மறக்கமுடியாத டெஸ்ட் தொடர் என குறிப்பிட்டு, ரன்கள், விக்கெட்டுகள் மற்றும் புதிய பதிவுகள் என வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் சில சிறந்த நினைவுகளை கொடுத்துள்ளதாக பதிவிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Ashwin (@rashwin99)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here