
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின் மூலம், இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மா, ஜாம்பவான் சச்சின் சாதனையை சமன் செய்ய உள்ளார்.
ரோஹித் சர்மா:
இந்திய அணியானது, ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுவதற்காக தீவிர பயிற்சியில் இறங்கி உள்ளது. இந்திய அணி இந்த ஆண்டு தொடக்க முதல் இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான ஒருநாள் தொடர்களை வென்ற நிலையில், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரையும் வெல்லும் என ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இந்த ஒருநாள் தொடரின் மூலம், இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மா 2 மகத்தான சாதனைகளை படைக்க உள்ளார். அதாவது, இவர் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி டெஸ்டில் 35 ரன்கள் எடுத்ததன் மூலம், சர்வதேச அளவில் 17,000 ரன்களை கடந்த 6வது இந்திய வீரரானர். இதனை தொடர்ந்து, எதிர்வரும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் 70 ரன்கள் எடுக்கும் பட்சத்தில், இந்தியாவின் தொடக்க வீரராக 13000 ரன்களை எட்டிய 3 வது இந்திய வீரராக மாறுவர்.
வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் சிறந்த நினைவுகளை பகிர்ந்த அஸ்வின்…, வைரலாகும் பதிவு இதோ!!
தற்போது வரை, இந்திய அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய இவர், 12,930 ரன்களை குவித்து 3 வது இடத்தில் உள்ளார். இந்த பட்டியலில் இந்திய ஜாம்பவான்களான வீரேந்திர சேவாக் 16,119 ரன்கள் மற்றும் சச்சின் டெண்டுகர் 15335 ரன்கள் என முதல் இரு இடங்களில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் மட்டும் 8 சதங்களை அடித்துள்ள ரோஹித், எதிர்வரும் போட்டிகளில் ஒரு சதம் அடிக்கும் பட்சத்தில் சச்சின் (9 சதம்) சாதனை சமன் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.