இந்திய சினிமாவில் ஏகப்பட்ட திறமையுடன் ஜொலித்து கொண்டிருப்பவர் தான் கங்கனா ரானாவத். தற்போது இவர் பி வாசு இயக்கத்தில் 17 வருடங்களுக்குப் பிறகு உருவாகும் சந்திரமுகி 2 படத்தில் ஹீரோயின் ஆக நடித்து வருகிறார். இதில் இவருடன் ராகவா லாரன்ஸ் , வடிவேலு என பல முன்னணி நடிகர்கள் பலரும் நடித்து வருகின்றனர்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இப்படத்திற்கான படப்பிடிப்பு மும்பையில் நடந்து வந்த நிலையில் இன்னும் சில நாட்களில் இதன் படப்பிடிப்பு முடிய உள்ளதாக படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது. மேலும் இப்படத்தில் இவரது கடைசி நாள் படப்பிடிப்பை கங்கனா முடித்த நிலையில் இவரை குழுவினர் கேக் வெட்டி வழி அனுப்பி உள்ளனர். இதை இன்ஸ்டாவில் குறிப்பிட்ட இவர் ” இவ்வளவு நாள் இப்படத்தில் நான் சந்தித்த சில அற்புதமான மனிதர்களிடம் இருந்து செல்வதை நினைத்தால் எனக்கு கடினமாகவும், கண்ணீர் வர வைப்பதாகவும் இருக்கிறது என கூறியுள்ளார்.
3 வயசு குட்டி ஜோதிகாவை பார்த்து இருக்கீங்களா?? ஐயோ.., ச்சோ. ஸ்வீட்.., கியூட் போட்டோஸ் வைரல்!!
மேலும் ராகவா லாரன்ஸ் மாஸ்டரின் அன்பால் நான் ஈர்க்கப்பட்டேன். ஒரு நடன ஆசிரியராக அறிமுகமான இவர் தற்போது ஏகப்பட்ட ஹிட் படங்களை கொடுக்கும் சூப்பர் ஸ்டாராக உருவாக்கியுள்ளார். இன்னும் சில நாட்களில் என் பிறந்த நாள் வரவுள்ள நிலையில், முன்கூட்டியே எனக்கு பிறந்தநாள் பரிசு கொடுத்து வழி அனுப்பிய மாஸ்டருக்கு நன்றி என உருக்கமான வார்த்தைகளால் குறிப்பிட்டுள்ளார்.
As #KanganaRanaut bids adieu to the sets of #CM2 🗝️ we wrap our Mumbai schedule today! 📍#Chandramukhi2 🗝️ 🎬 #PVasu 🌟 @offl_Lawrence @KanganaTeam 🤝 @gkmtamilkumaran 🪙 @LycaProductions #Subaskaran pic.twitter.com/KVRXR9QXDM
— Lyca Productions (@LycaProductions) March 15, 2023