11, 12 வகுப்பு பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களுக்கு முக்கிய செய்தி.., அன்பில் மகேஷ் வெளியிட்ட அறிவிப்பு!!

0
11, 12 வகுப்பு பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களுக்கு முக்கிய செய்தி.., அன்பில் மகேஷ் வெளியிட்ட அறிவிப்பு!!
11, 12 வகுப்பு பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களுக்கு முக்கிய செய்தி.., அன்பில் மகேஷ் வெளியிட்ட அறிவிப்பு!!

+1, +2 மொழித் தேர்வு எழுதாத மாணவர்களை கண்டறிந்து பிற தேர்வுகளை எழுத வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

+1, +2 பொதுத்தேர்வு

தமிழகம் மற்றும் புதுவையில் 2022-23 ஆம் ஆண்டிற்கான 10th, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு பொதுத் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் பிளஸ் 2 வகுப்புக்கான பொதுத்தேர்வு ஏப்ரல் 3ஆம் தேதி தொடங்கிய நிலையில், +1 வகுப்புக்கான தேர்வு ஏப்ரல் 4ஆம் தேதி தொடங்கி மொழித் தேர்வுகள் மட்டும் முடிந்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

ஆனால் 12 ஆம் வகுப்புக்கான மொழித் தேர்வில் கிட்டத்தட்ட 50,000 பேர் தேர்வு எழுதவில்லை என்று பள்ளிக் கல்வித் துறை தெரிவித்திருந்தது. அதே போன்று 11 ஆம் வகுப்புக்கான தேர்விலும் 12,660 மாணவர்கள் தேர்வு எழுதவில்லை என்று தேர்வுக்கு குழு அதிகாரிகள் கூறியிருந்தனர். இதனால் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூட தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மறுவாய்ப்பு வழங்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறையா?? அப்போ தேர்வுகள் எப்போது.., கல்வித்துறை அமைச்சர் விளக்கம்!!!

இந்நிலையில் கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ், மொழி தேர்வை எழுதாத மாணவர்களை கண்டறிந்து அவர்களை பிறமொழி தேர்வுகளை எழுத வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் அவர்கள் ஏன் தேர்வு எழுதவில்லை என்ற காரணத்தை கண்டறியுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கு பெற்றோர்களும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here