தமிழகத்தில் வைரஸ் காய்ச்சல் பற்றி மக்கள் அச்சப்பட வேண்டாம்., அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!!!

0
தமிழகத்தில் வைரஸ் காய்ச்சல் பற்றி மக்கள் அச்சப்பட வேண்டாம்., அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!!!
தமிழகத்தில் வைரஸ் காய்ச்சல் பற்றி மக்கள் அச்சப்பட வேண்டாம்., அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!!!

தமிழகத்தில் வைரஸ் காய்ச்சல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை தொடர்ந்து இது குறித்த முக்கிய தகவலை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

வைரஸ் காய்ச்சல்:

இந்தியாவில் கடந்த 2 வருடமாக கொரோனா தொற்று அச்சுறுத்தல் நீங்கி பொதுமக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர். ஆனால் கடந்த சில மாதங்களாக இருமல், காய்ச்சல், மூச்சுத்திணறல் உள்ளிட்ட அறிகுறிகளுடன் கூடிய இன்ஃப்ளூயன்ஸா வகையை சேர்ந்த வைரஸ் காய்ச்சலால் பெரும்பாலானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதன்மூலம் அனைத்து பருவத்தினரும் அவதிப்பட்டு வரும் நிலையில் திருச்சியை சேர்ந்த இளைஞர் ஒருவரும் அண்மையில் உயிரிழந்தார். இதையடுத்து தமிழ்நாடு முழுவதும் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பயன்பெறும் வகையில் சுமார் 6613 காய்ச்சல் முகாமை சுகாதாரத்துறை ஏற்படுத்தியது. இதன்மூலம் நாள்தோறும் எண்ணற்றவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இதுகுறித்த பாதிப்புகளை எண்ணி மக்கள் அச்சப்பட வேண்டாம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளார்.

11, 12 வகுப்பு பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களுக்கு முக்கிய செய்தி.., அன்பில் மகேஷ் வெளியிட்ட அறிவிப்பு!!

அதாவது “காய்ச்சல் முகாம் மூலம் இதுவரை 7 லட்சம் பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் இந்த வைரஸின் வீரியம் கட்டுக்குள் தான் உள்ளது. மேலும் குறைப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் அச்சப்பட வேண்டிய அவசியமில்லை. அதேபோல் சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவர்களின் உடல்நிலையும் சீராக உள்ளது.” என தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here