ஓய்வூதியதாரர்களுக்கு குட் நியூஸ் .., உயர் ஊதியத்திற்கான ஓய்வூதியம் பெற மீண்டும் வாய்ப்பு., EPFO அறிவிப்பு!!

0
ஓய்வூதியதாரர்களுக்கு குட் நியூஸ் .., உயர் ஊதியத்திற்கான ஓய்வூதியம் பெற மீண்டும் வாய்ப்பு., EPFO அறிவிப்பு!!
ஓய்வூதியதாரர்களுக்கு குட் நியூஸ் .., உயர் ஊதியத்திற்கான ஓய்வூதியம் பெற மீண்டும் வாய்ப்பு., EPFO அறிவிப்பு!!

இந்தியாவில் அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு அவர்கள் பெற்ற ஊதியத்தில் இருந்து குறிப்பிட்ட தொகையை மாதந்தோறும் ஓய்வூதியமாக EPFO கணக்கில் அரசு வழங்கி வருகிறது. இதன்படி கடந்த 2014ம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்கு முன்னதாக ஓய்வு பெற்றவர்களுக்கு உயர்த்தப்பட்ட ஊதியத்திற்கான ஓய்வூதியம் வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

எனவே இது தொடர்பான உத்தரவுகள் கடந்த டிசம்பர் 29 முதல் ஜனவரி 5ம் வரை அனைத்து கள அலுவலகங்களுக்கும் அனுப்பப்பட்டது. இதனால் ஓய்வூதியதாரர்கள் பத்தி 11 (3) படிவத்தில் தங்களது பிராந்திய அலுவலகங்களில் ஒப்புதலை பெற்று EPFO தளத்தில் பதிவேற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தியிருந்தது. இதையடுத்து இந்த படிவத்தை ஆன்லைனில் பதிவேற்ற கால அவகாசமாக மார்ச் 3ம் தேதி வரை EPFO நிறுவனம் வழங்கியது. ஆனால் குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் அநேகமானோர் படிவத்தை பதிவேற்றம் செய்யாததால் கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என பலரும் கோரிக்கை வைத்து வந்தனர்.

தமிழகத்தில் வைரஸ் காய்ச்சல் பற்றி மக்கள் அச்சப்பட வேண்டாம்., அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!!!

இந்நிலையில் இவர்களுக்கான கால அவகாசத்தை EPFO நிறுவனம் நீட்டித்துள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி குறிப்பிட்ட ஓய்வூதியதாரர்கள் உயர் ஊதியத்திற்கான ஓய்வூதிய ஒப்புதல் படிவத்தை ஆன்லைனில் பதிவேற்ற மே 3ம் தேதி வரை மீண்டும் கால அவகாசம் வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் இந்த அரிய வாய்ப்பை தவற விடாமல் ஓய்வூதியதாரர்கள் பயன்படுத்தி கொள்ளுமாறும் EPFO நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here