வசூலில் சக்கபோடு போடும் “டாடா” திரைப்படம்.., OTT ரிலீஸ் தேதி அறிவிப்பு!!!!

0
வசூலில் சக்கபோடு போடும்
வசூலில் சக்கபோடு போடும் "டாடா" திரைப்படம்.., OTT ரிலீஸ் தேதி அறிவிப்பு!!!!

நடிகர் கவின் நடிப்பில் உருவான டாடா திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் படத்தோட ஓடிடி ரிலீஸ் தேதி குறித்து இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

டாடா திரைப்படம்

சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் வேட்டையனாக அறிமுகமாகி மக்கள் மத்தியில் ரீச்சானவர் தான் நடிகர் கவின். இந்த சீரியலுக்கு பிறகு வாய்ப்பு கிடைக்காமல் அலைந்து கொண்டிருந்த போது பிக்பாஸ் என்ற பெரிய Platform அவருக்கு கிடைத்தது. அந்த ஷோவின் மூலமாக பெண்களை கவர்ந்தார். அதிலிருந்து இவருக்கு பெண் ரசிகைகள் அதிகம் உருவாகினர். அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளிய வந்தவுடனே LIFT என்ற திரில்லர் படத்தில் நடித்தார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

தற்போது இவரின் கல்லூரி நண்பரான கணேஷ் கே.பாபு இயக்கத்தில் டாடா திரைப்படத்தில் நடித்துள்ளார். கடந்த மாதம் 10ஆம் தேதி வெளியான இந்த படத்தில் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்த அபர்ணா தாஸ், ‘முதலும் நீ முடிவு நீ’ ஹரிஷ் மற்றும் கே.பாக்யராஜ், வி.டி.வி.கணேஷ் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். தற்போதைய சூழலில் இருக்கும் ஒரு இளைஞனின் பின்னணியில் டாடா திரைப்படத்தின் கதை எழுதப்பட்டிருக்கிறது.

இதுனால தான் விஜய் Real Heroவா இருக்காரு.., மேடையில் LEO பட அப்டேட்டை கொடுத்த மிஷ்கின்!!

கல்லூரி மாணவன் தொடங்கி, பொறுப்பான அப்பாவாக மாறும் தருணம் வரை காட்சிகள் இடம்பெறும் டாடா திரைப்படம் வெளியான 20 நாட்களில் 15 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. இப்படத்தை பார்த்து தனுஷ், ராகவா லாரன்ஸ் உட்பட பல பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்தனர். சமீபத்தில் கூட நடிகர் கார்த்தி கவினுக்கு கால் பண்ணி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த நிலையில் டாடா திரைப்படம் குறித்து ஒரு அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது டாடா திரைப்படம் வருகிற 10ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக சொல்லப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here