இந்திய ஹாக்கி அணிக்கு புதிய தலைமை பயிற்சியாளர் அறிவிப்பு!!

0
இந்திய ஹாக்கி அணிக்கு புதிய தலைமை பயிற்சியாளர் அறிவிப்பு!!
இந்திய ஹாக்கி அணிக்கு புதிய தலைமை பயிற்சியாளர் அறிவிப்பு!!

இந்திய ஆடவர் ஹாக்கி அணிக்கு புதிய தலைமை பயிற்சியாளராக தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த கிரேக் ஃபுல்டன நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய ஹாக்கி

ஆடவருக்கான உலக கோப்பை ஹாக்கி தொடர் இந்தியாவில் சமீபத்தில் நடந்து முடிந்தது. இந்த உலக கோப்பையை ஜெர்மனி அணி 3 வது முறையாக வென்று அசத்தியது. ஆனால், இந்திய அணி சொந்த மண்ணில் நடைபெற்ற உலக கோப்பையை, வெற்றியுடன் தொடங்கினாலும், காலிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்து உலக கோப்பையை வெல்ல தவறியது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதனால், உலக கோப்பைக்கான இந்திய அணிக்கு பயிற்சியாளராக இருந்த கிரஹாம் ரீட் தனது பதவியில் இருந்து விளக்கினார். இவர் விலகியதை அடுத்து, இந்திய அணிக்கு புதிய பயிற்சியாளரை தேர்வு செய்யும் நிலைக்கு நிர்வாகம் தள்ளப்பட்டது. மேலும், FIH புரோ லீக் தொடர் வரும் மார்ச் 10ம் தேதி முதல் தொடங்க உள்ளது.

டெஸ்டில் அதிக தோல்வி பட்டியலில் இணைந்த இந்தியா…, சொந்த மண்ணில் நடந்த சோகம்!!

இந்நிலையில், இந்திய ஹாக்கி நிர்வாகமானது, இந்திய அணிக்கு தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த கிரேக் ஃபுல்டனை தலைமை பயிற்சியாளராக நியமித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர், பெல்ஜியம் ஆண்கள் அணியின் உதவி பயிற்சியாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here