இதுனால தான் விஜய் Real Heroவா இருக்காரு.., மேடையில் LEO பட அப்டேட்டை கொடுத்த மிஷ்கின்!!

0
இதுனால தான் விஜய் Real Heroவா இருக்காரு.., மேடையில் LEO பட அப்டேட்டை கொடுத்த மிஷ்கின்!!
இதுனால தான் விஜய் Real Heroவா இருக்காரு.., மேடையில் LEO பட அப்டேட்டை கொடுத்த மிஷ்கின்!!

இயக்குனர் மிஷ்கின் LEO படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம் குறித்து சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஓப்பனாக பேசியுள்ளார்.

LEO திரைப்படம்

தென்னிந்திய தமிழ் சினிமாவில் நம்பிக்கை நாயகனாக ரசிகர்கள் மனதில் நிலைத்து நிற்பவர் தான் நடிகர் விஜய். தற்போது LEO திரைப்படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இப்படத்தை சென்சேஷன் இயக்குனரான லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். அதுபோக திரிஷா, மிஷ்கின், கெளதம் மேனன், அர்ஜுன், சஞ்சய் தத், சாண்டி மாஸ்டர் மற்றும் பிக்பாஸ் ஜனனி ஆகியோர் அதிரடியாக நடித்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

தற்போது இந்த படத்தின் ஷூட்டிங் காஸ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் மிஷ்கின் நடிக்க வேண்டிய பகுதிகளை நடித்து முடித்துவிட்டு சென்னை திரும்பியது எல்லாருக்கும் தெரியும். இந்த நிலையில் அண்மையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் LEO ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவத்தை வெளிப்படையாக பேசியுள்ளார். அதாவது LEO படப்பிடிப்பில் ஒரு சண்டை காட்சியை படமாக்கினர். அப்போது விஜய் மிஷ்கின் அண்ணாக்கு வலிக்கும் நான் எப்படி அவரை அடிக்க என்று கூறினார்.

ராஜா ராணி 2 வில் நியூ என்ட்ரி கொடுக்கும் பிரபலங்கள்.., சந்தியாவிற்கு காத்திருக்கும் அதிர்ச்சி!

அதற்கு நான் விஜய் சும்மா அடிங்க நானும் ஒரு இயக்குனர் தான் அதெல்லாம் ஒன்னும் இல்ல என்று சொன்னேன். அதன் பிறகு தான் என்னை அடித்தார். அடிச்ச உடனே ஓடி வந்து கட்டி பிடிச்சு ஒன்னும் ஆகலையே அண்ணா என்று கேட்டார். அதனால தான் அவரு இந்த ரியல் ஹீரோ என்று புகழாரம் பாடியுள்ளார். தற்போது இந்த தகவல் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here