உயிருக்கு போராடுகிறாரா நடிகர் அஜித்தின் தம்பி?? அவர் மனைவி கொடுத்த பரபரப்பு பேட்டி!!

0
உயிருக்கு போராடுகிறாரா நடிகர் அஜித்தின் தம்பி?? அவர் மனைவி கொடுத்த பரபரப்பு பேட்டி!!
உயிருக்கு போராடுகிறாரா நடிகர் அஜித்தின் தம்பி?? அவர் மனைவி கொடுத்த பரபரப்பு பேட்டி!!

கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் சிறுத்தை சிவா தம்பி பாலாவின் உடல்நிலை குறித்த அப்டேட்டை அவருடைய மனைவி வெளியிட்டுள்ளார்.

நடிகர் பாலா:

தமிழ் சினிமாவில் நடிகர் அஜித் குமார் நடித்து வெளியான வீரம் திரைப்படத்தில் அவருக்கு தம்பியாக நடித்து பிரபலமானவர் தான் நடிகர் பாலா. இவர் பிரபல இயக்குனர் சிறுத்தை சிவாவின் சகோதரர் ஆவார். இந்நிலையில் பாலாவுக்கு கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர், திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து, கொச்சியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டது. அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவருக்கு கல்லீரலில் பிரச்சனை இருப்பதை கண்டறிந்து, உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்து ICUவில் சிகிச்சை கொடுத்து வந்தனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அவரின் இரண்டாவது மனைவி எலிசபெத் மற்றும் குடும்பத்தினர் அவரை பக்குவமாக பார்த்து கொண்டு வருகின்றனர். மேலும் இவர் உடல்நலம் குறித்து வதந்திகளை சில யூடியூப் சேனல்கள் கிளப்பி வருகின்றனர். இந்த நிலையில் பாலா குறித்து கிளப்பி வரும் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பாலா மனைவி விளக்கம் கொடுத்துள்ளார்.

அஜித்துமில்ல விஜய்யுமில்ல., என்னோட லிஸ்டே வேற! பகீர் கிளப்பிய சுப்ரீம் ஸ்டார் சரத்குமார்!!

அதாவது அவர் கூறியதாவது, ICUவில் பாலா சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவருடைய உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருந்து வருகிறது. மேலும் அவர் நலமாக இருப்பதை ரசிகர்களிடம் தெரிவிக்குமாறு என்னிடம் கூறினார் என எலிசபெத் கூறியுள்ளார். அதுமட்டுமின்றி தேவையில்லாத வதந்திகளை பரப்ப வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here