அரசு பள்ளிகளில் உள்ள காலி பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம், தேர்வு மூலம் நிரப்பி வருகிறது. இதன்படி தமிழகத்தில் கடந்த 2009ம் ஆண்டு மே 31 மற்றும் ஜூன் 1ம் தேதி என அடுத்தடுத்த நாட்களில் இடைநிலை ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டனர். இதில் ஒரு நாள் வித்தியாசத்தில் ஜூன் 1ம் தேதி பணியமர்த்தப்பட்ட அவர்களுக்கு அடிப்படை ஊதியத்தில் ரூ.3,170 குறைத்து வழங்கப்பட்டு வருகிறது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இதனால் இந்நாளில் பணியமர்த்தப்பட்ட சுமார் 20,000க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் “சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும்” என தொடர் போராட்டங்களை மேற்கொண்டு வந்தனர். மேலும் இது சம்பந்தமாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தேர்தல் அறிக்கையில் தெரிவித்ததாகவும் ஊழியர்கள் இதை சுட்டி காட்டினர். இதனால் இது குறித்த நடவடிக்கைகளை ஆராய பள்ளிக்கல்வித்துறை குழு அமைத்து முடிவு செய்ய வேண்டும் என தமிழக அரசு கடந்த ஜனவரி 31ம் தேதி அரசாணை பிறப்பித்தது.
தமிழகத்தின் இந்த பகுதி மெட்ரோ பணிகள் திடீர் நிறுத்தம்., திட்டத்தை கைவிட நிர்வாக முடிவு!!
இதையடுத்து இது சம்பந்தமாக இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் மற்றும் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் இயக்கத்திடம் நாளை (மார்ச் 10) ஆலோசனை கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இக்கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் முன்னிலையில் நடைபெற உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.