புதிய ரேஷன் கார்டு இவ்வளவு சீக்கிரதுல வாங்கிக்கலாமா? இது தெரியாம ஏமாந்துட்டேன்!! குமுறும் புதுமண தம்பதிகள்..

0
புதிய ரேஷன் கார்டு இவ்வளவு சீக்கிரதுல வாங்கிக்கலாமா? இது தெரியாம ஏமாந்துட்டேன்!! குமுறும் புதுமண தம்பதிகள்..

நாடு முழுவதும் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் நியாய விலை கடைகளில் உணவுப் பொருட்களை சலுகை விலையில் மத்திய மாநில அரசுகள் வழங்கி வருகிறது. இதற்கு முக்கிய ஆவணமாக கருதப்படும் குடும்ப அட்டையை புதிதாக எப்படி பெறுவது என தெரியாமல் புதுமண தம்பதிகள் உள்ளிட்டோர் திகைத்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்களை இடைத்தரகர்கள் மூளை சலவை செய்து கையூடலில் ஈடுபட்டு வருவதும் அரங்கேறி வருகிறது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதனால் இது போன்ற குற்ற செயல்களால் நுகர்வோர்கள் ஏமாறாமல் இருக்க புதிய ரேஷன் கார்டு பெறுவதற்கு எளிய வழிமுறையை தமிழக உணவு வழங்கல் துறை வகுத்துள்ளது. அதன்படி https://www.tnpds.gov.in/ என்ற இணையத்தளத்திற்கு நுகர்வோர்கள் செல்ல வேண்டும். இதில் தோன்றும் பக்கத்தில் வலது புறத்தில் “புதிய மின்னணு அட்டை விண்ணப்பிக்க” என்ற பட்டனை தொடுக்க வேண்டும். பின்னர் காட்டப்படும் படிவத்தை முறையாக கண்காணித்து சுய விவரங்களை பூர்த்தி செய்ய வேண்டும். இதன் கீழே குடும்ப உறுப்பினர் விவரம் மற்றும் உரிய ஆவணங்களை குறிப்பிட்ட அளவு M.B.யில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

தமிழக இடைநிலை ஆசிரியர்களின் ஊதியத்தில் எழுந்த சிக்கல்? குழு அமைத்து ஆராய கல்வித் துறை உத்தரவு!!

பின்னர் உறுதிப்படுத்துதல்களை கிளிக் செய்து “பதிவு செய்” என்ற பட்டனை தொடுத்தால் போதும் திரையில் ஒரு Reference Number காண்பிக்கப்படும். இதை குறித்து வைத்துக் கொள்ள வேண்டும். அதேபோல் Confirmation குறுஞ்செய்தியை குறிப்பிட்ட தொலைபேசி எண்ணுக்கு அனுப்பப்படும். அவ்வளவுதான் இதன் பிறகு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆவணங்களை சோதனை செய்த பின் புதிய ஸ்மார்ட் கார்டு குறிப்பிட்ட முகவரிக்கு தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும். இதுகுறித்த கூடுதல் விவரங்களுக்கு 1800 425 5901 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here