அஜித்துமில்ல விஜய்யுமில்ல., என்னோட லிஸ்டே வேற! பகீர் கிளப்பிய சுப்ரீம் ஸ்டார் சரத்குமார்!!

0
அஜித்துமில்ல விஜய்யுமில்ல., என்னோட லிஸ்டே வேற! பகீர் கிளப்பிய சுப்ரீம் ஸ்டார் சரத்குமார்!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சரத்குமார், டாப் ஹீரோக்கள் குறித்த தனது கருத்துக்களை வெளிப்படையாக பகிர்ந்துள்ளார்.

சரத்குமார் பேச்சு:

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சரத்குமார், தனது வாரிசு படத்துக்கு பின் தற்போது முக்கிய கேரக்டர்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் பங்கேற்ற போது அதன் தொகுப்பாளர் இவரிடம் உச்சபட்ச நடிகர்கள் குறித்து தங்களுடைய கருத்தை பதிவு செய்யுமாறு கேட்டார். அதன்படி, ரஜினி பற்றி சொல்லும் போது , நான் அடிக்கடி சந்திக்கும் ஒரு மிகச் சிறந்த நண்பர் என குறிப்பிட்டார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அதேபோல் கமல் பற்றி கேட்டபோது அவரை நான் அடிக்கடி பார்க்க முடியாது என தெரிவித்தார். தொடர்ந்து விஜய் என சொல்லும்போது உச்ச நடிகர் என்றும், அஜித் எனக் கேட்ட போது உச்ச நடிகர் என்றும் ஒரே பதிலைச் சொன்னார். கடைசியாக தனுஷ் என கேட்டபோது, அவர் “சிறந்த நடிகர்” என குறிப்பிட்டார்.

ஆர்ஆர்ஆர் பட சாதனைக்கு பங்குக்கு வந்த புஷ்பா 2.., திரைக்கு வரும் முன்னே 1000 கோடி வசூல் படைத்து சாதனை!!

டாப் ஹீரோக்களுக்கு கூட கொடுக்காத இந்த, சிறப்பை நீங்கள் தனுசுக்கு மட்டும் கொடுப்பது ஏன் என்ன நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்னர். அதுமட்டுமில்லாமல் விஜய் அஜித் என்ற சிக்கலே வேண்டாம் என, இருவருக்கும் ஒரே மாதிரியான பதிலை கொடுத்து சரத் எஸ்கேப் ஆகிவிட்டார் எனவும் இது பற்றி தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here