“ஜவான்” படத்தை நிராகரித்த அல்லு அர்ஜுன்.., அதுக்கு காரணம் விஜய் சேதுபதியா?? பின்னாடி இப்படி ஒரு கதை இருக்கா??

0
"ஜவான்" படத்தை நிராகரித்த அல்லு அர்ஜுன்.., அதுக்கு காரணம் விஜய் சேதுபதியா?? பின்னாடி இப்படி ஒரு கதை இருக்கா??

நடிகர் ஷாருக்கான் நடிக்கும் ஜவான் திரைப்படம் குறித்து சமூக வலைத்தளங்களில் முக்கியமான அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

ஜவான் திரைப்படம்:

தென்னிந்திய தமிழ் சினிமாவில் ராஜா ராணி, தெறி, மெர்சல் மற்றும் பிகில் போன்ற வெற்றி படங்களை இயக்கி கோலிவுட்டில் முன்னணி இயக்குனராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் அட்லீ. தற்போது பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை வைத்து ஜவான் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் மூலம் பாலிவுட்டில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா என்ட்ரி கொடுக்கிறார். அதுபோக நடிகர் விஜய் சேதுபதி, யோகி பாபு ஆகியோர் முக்கிய ரோலில் நடித்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

சமீபத்தில் இப்படத்தின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை அதிக அளவில் கவர்ந்தது. மேலும் இப்படத்தின் ஷூட்டிங் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளதாகவும், கூடிய விரைவில் ஷூட்டிங்கை முடித்து புரமோஷன் பணிகளில் படக்குழுவினர் இறங்க இருக்கின்றனர். இந்த நிலையில் ஜவான் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க நடிகர் அல்லு அர்ஜுனிடம் இயக்குனர் அட்லீ கதையை சொல்லியிருக்கிறார்.
ஆனால் அல்லு அர்ஜுன் படத்தில் நடிக்க மறுத்துவிட்டதாக சொல்லப்படுகிறது. அதற்கு காரணம், அல்லு அர்ஜுன் புஷ்பா 2 வில் நடித்து வருவதால், ஜவான் படத்துக்கு கால்ஷீட் கொடுக்க முடியவில்லை.

யோவ் குணசேகரா.., நல்லா அசிங்கபட்டுடியா?? ஒரே வார்த்தையில் கொட்டத்தை அடக்கிய ஜான்சி.., சூடுபிடிக்கும் எதிர்நீச்சல்!!

இதனால் அவர் ஜவான் படத்தில் நடிக்க முடியாமல் போனது. மேலும் ஜவான் படத்தில் விஜய் சேதுபதி இருப்பதால் தான் இவர் நடிக்க ஒத்துக் கொள்ளவில்லை என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். ஏனென்றால் விஜய் சேதுபதி ஜவான் படத்துக்கு முன்னாடி புஷ்பா 2வில் கமிட்டாகி இருந்த நிலையில் ஷாருக்கான் படம் என்றோனே அல்லு அர்ஜுனுக்கு அல்வா கொடுத்துட்டு ஜவான் படத்தில் இணைந்துள்ளார். அதனால் தான் அவர் நடிக்க ஒத்துக் கொள்ளவில்லை என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.. இப்படத்தில் நடிகர் விஜய் சிறப்பு கேமியோ ரோலில் நடித்துள்ளதாக சமீபத்தில் செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here