
எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரனின் பிடிவாதத்தால் ஆதிரை தூக்க மாத்திரையை சாப்பிட்டு உயிருக்கு போராடுகிறார். ஆனாலும் கொஞ்சம் கூட கவலை இல்லாமல் குணசேகரன் “தான் பிடித்த முயலுக்கு மூணு கால் என்று” ஆதிரை செத்தாலும் பரவாயில்லை கரிகாலனை தான் கல்யாணம் பண்ணனும் என முடிவோடு இருக்கிறார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இன்னொரு பக்கம் ஆதிரை உயிருக்கு போராடுவதை அறிந்து ஈஸ்வரி, அருண் வருத்தப்படுகிறேன். இந்த விஷயத்தை தெரிந்து கொண்டு அவருக்கு என்ன ஆச்சு என்ன பதறி அடித்துக்கொண்டு கரிகாலனும் அவனது அம்மாவும் குணசேகரன் வீட்டுக்கு வருகின்றனர். அப்போது கரிகாலன் ஆதிரைக்கு என்னாச்சு என கேட்க அவ செத்தா எனக்கென்ன. இருந்தா எனக்கு என்ன. அவ என்ன அசிங்கப்படுத்த வந்தவனு சொல்கிறார்.
கடைசில பாக்கியாவுக்கு ஜோடி வந்தாச்சு.., பாக்கியலட்சுமி சீரியல் எதிர்பாராத ட்விஸ்ட்!!
இதைக் கேட்டு கரிகாலன் அம்மா என்ன நீங்க இப்படி சொல்லிட்டு இடிச்ச புளி மாதிரி உட்கார்ந்து இருக்கீங்களே என அசிங்கப்படுத்துகிறார். இதைக் கேட்டு குணசேகரன் என்ன சொல்லிட்டு போகுது பாரு என கதிரிடம் சொல்கிறார்.
இந்த ப்ரோமோவை வைத்து பார்க்கும் போது கண்டிப்பாக ஆதிரை உயிர் பிழைத்து அருணை திருமணம் செய்து கொள்வார். இந்த ஏமாற்றம் தாங்க முடியாமல் கரிகாலனின் அம்மா குணசேகரனை அவமானப்படுத்துவார் என்று தான் தெரிகிறது. இப்படி மட்டும் நடந்தால் குணசேகரனின் ஆட்டத்திற்கு ஒட்டுமொத்தமாக ஒரு முடிவு கிடைத்துவிடும்.