
ஹாங்காங் அரசு சுற்றுலா துறையை மேம்படுத்த தற்போது ஒரு சூப்பர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது பற்றிய முழு தகவல்களை இங்கே பார்ப்போம்.
விமான டிக்கெட்டுகள் இலவசம்:
கொரோனா நோய் தொற்றுக்கு பிறகு, ஹாங்காங் நாட்டில் சுற்றுலா துறை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது என்றே கூறலாம். 2018 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, 2022 ஆம் ஆண்டு வெறும் 6 லட்சம் பேர் மட்டுமே இந்த நாட்டிற்கு பயணம் செய்துள்ளனர். இது வழக்கத்தை விட மிகவும் குறைவு. இதனால் சுற்றுலா துறை மிகவும் பின்தங்கி உள்ளது. மேலும் கடுமையான வருவாய் இழப்பையும் இந்த நாடு சந்தித்து உள்ளது.
அதானி குழும நிறுவனங்களின் முறைகேடு குறித்த வழக்கு – அதிரடி உத்தரவு பிறப்பித்த உச்சநீதிமன்றம்!
இந்த நிலையை மாற்றும் விதமாக, அரசு ஒரு புதிய அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் படி, வெளிநாட்டினருக்கு 5 லட்ச விமான டிக்கெட்களை இலவசமாக வழங்க முடிவு செய்துள்ளது. பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், இந்தோனேசியா, தாய்லாந்து, கம்போடியா மலேசியா மற்றும் வியட்நாம் நாடுகளை சேர்ந்தவர்களுக்கு இச்சலுகையை அறிவித்துள்ளது. அதற்காக தங்கள் நாட்டிற்கு வருவோருக்கு கட்டாயம் முகக்கவசம் அணிய தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளது.
“ஹல்லோ ஹாங்காங்” என்ற முழக்கத்துடன் இந்த அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது. இதற்கான டிக்கட்டுகள் கொரோனா காலத்திலே வாங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டிற்கு சுற்றுலா வருவோர் கட்டாயம் இரண்டு நாட்கள் அங்கே இருக்க வேண்டும் என்ற விதிமுறையும் அறிவித்துள்ளது.