நியூசிலாந்துக்கு பறக்க இருக்கும் பும்ரா…, இந்த முடிவை பிசிசிஐ தான் எடுத்தா?? வெளியான அப்டேட்!!

0
நியூசிலாந்துக்கு பறக்க இருக்கும் பும்ரா..., இந்த முடிவை பிசிசிஐ தான் எடுத்தா?? வெளியான அப்டேட்!!
நியூசிலாந்துக்கு பறக்க இருக்கும் பும்ரா..., இந்த முடிவை பிசிசிஐ தான் எடுத்தா?? வெளியான அப்டேட்!!

இந்திய அணியின் டெத் ஓவர் ஸ்பெசலிஸ்டான பும்ராவை, பிசிசிஐ மேல் சிகிச்சைக்காக நியூசிலாந்துக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பும்ரா:

இந்திய அணியின் முன்னணி பந்து வீச்சாளரான பும்ரா, கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிய கோப்பைக்கு முன்பில் இருந்தே, முதுகு வலியால் அவதிக்கு உள்ளாகி வருகிறார். இதனால், பும்ரா ஆசிய கோப்பை, டி20 உலக கோப்பை, பார்டர் கவாஸ்கர் டிராபி உள்ளிட்ட பல இரு தரப்பு தொடர்களை இழந்தார். மேலும், பும்ராவின் உடல்நிலை தொடர்ந்து கண்காணித்து வரும் பிசிசிஐ, இவரை எதிர்வரும் ஐபிஎல் மற்றும் WTC தொடர்களிலும் விளையாட கூடாது என்று அறிவுறுத்தி இருந்தது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இதற்கிடையில், தற்போது தேசிய கிரிக்கெட் அகாடமியில் (NCA) சிகிச்சை பெற்று வரும் பும்ராவுக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டால் தான் நல்ல பலன் அளிக்கும் என நேற்று தகவல் வெளியாகி இருந்தது. இந்நிலையில், பும்ராவை மேல் சிகிச்சைக்காக நியூசிலாந்துக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளதாக பிசிசிஐ தரப்பில் இருந்து கூறப்படுகிறது.

துபாய் ஓபன் டென்னிஸ்: நெதர்லாந்து வீரரை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறிய நோவக் ஜோகோவிச்!!

இதற்கு முன், பும்ராவை போல ஹர்திக் பாண்டியா முதுகு வலியால் அவதிப்பட்ட போது, பிசிசிஐ இவரை மேல் சிகிச்சைக்காக லண்டனுக்கு அனுப்பியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சிகிச்சையில் இருந்து மீண்டுள்ள ஹர்திக் பாண்டியா இந்தியாவின் டி20 அணியின் தற்காலிக கேப்டனாக உயர்ந்துள்ளார். இதனால், பும்ராவும் சிகிச்சைக்கு பிறகு, பூரண குணமாகி அணிக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இவர் அறுவை சிகிச்சை செய்து கொண்டால், அக்டோபர் மாதம் நடைபெற உள்ள 50 ஓவர் உலக கோப்பையை இழக்க அதிக வாய்ப்பு இருக்க கூடும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here