Thursday, May 16, 2024

“கரோனில்” மருந்து கொரோனாவை குணப்படுத்தும் என்று சொல்லவில்லை” – பதஞ்சலி நிறுவனம் “பல்டி”..!

Must Read

“கரோனில்” மருந்து கொரோனா உள்ளவர்களை குணப்படுத்தும் என்று நாங்கள் குறைவே இல்லை என்று அந்தர் பல்டி அடித்துள்ளார்,பதஞ்சலி ஆயுர்வேத நிறுவன நிறுவனர் பாபா ராம் தேவ்.

“கரோனில்” மருந்து:

கடந்த சில மாதங்களுக்கு முன் பாபா ராம் மற்றும் பதஞ்சலி ஆயுர்வேத அமைப்பை சார்ந்த ஆச்சார்யா போன்றோர் “”கரோனில்” என்ற மருந்தை கண்டுபிடித்து உள்ளதாகவும், அந்த மருந்து கொரோனா நோயாளிகளை குணம்படுத்தும் என்றும், 69 % நோய் குணப்படுத்தப்பட்டது என்றும், 7 நாட்கள் சாப்பிட்டு வந்தால் 100 % குறையும் என்றும் ஆணித்தரமாக கூறினார். கூடிய விரைவில் இதனை நாடு முழுவதும் அறிமுகபடுத்த உள்ளதாகவும் தெரிவித்து இருந்தனர்.

baba raam dev - coronil medicine
baba raam dev – coronil medicine

இதற்கு, பல விமர்சனங்கள் எழுந்தது, அது மட்டும் அல்லாமல் மத்திய அமைச்சகமும் பல கேள்விகளை எழுப்பியது. இதற்கு பதில் அளிக்க முடியாமல் இவர்கள் திகைத்தனர். அதனால் யோகா குரு பாபா ராம்தேவ், பதஞ்சலி சி.இ.ஓ. ஆச்சாரியா பாலகிருஷ்ணா, மற்றும் 4 பேர் மீது எஃப்.ஐ.ஆர் தொடரப்பட்டது.

அந்தர் பல்டி:

தற்போது, இவர்கள் தங்கள் கருத்தை அப்படியே உல்டா செய்து கூறியதாவது ” நாங்கள் இந்த மருந்து குணப்படுத்தும் என்று கூறவே இல்லை. இந்த மருந்து ஆயுஷ் அமைச்சகம் கொடுத்து உள்ள உரிமத்தின் படிதான் தயாரிக்கபட்டுள்ளது. எங்களுக்கு எதிராக சதிவலை பின்னப்பட்டு உள்ளது.

Coronavirus Cure: Baba Ramdev's Patanjali launching coronil
Coronavirus Cure: Baba Ramdev’s Patanjali launching coronil

ஆயுஷ் அமைச்சகம் எங்களுக்கு மறுபடியும் ஒரு வாய்ப்பு கொடுத்தால் நாங்கள் மருத்துவ சோதனை நடத்த தயாராக உள்ளோம். துளசி கிலாய் அஸ்வகந்தாவை மேம்பட்ட மட்டத்தில் சேர்க்கையாகப் பயன்படுத்தி தயாரித்தோம், இதனை கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுத்தோம், அவர்கள் குணம் அடைந்தனர்” என்று கூறியுள்ளார் பதஞ்சலி சி.இ.ஓ. ஆச்சாரியா பாலகிருஷ்ணா.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

சபரிமலை பக்தர்களுக்கு நற்செய்தி., இனி பம்பையில் வாகனங்கள் நிறுத்தலாம்? நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!!!

உலகப்பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில், மண்டல மற்றும் மகர விளக்கு காலங்கள் தவிர மாதந்தோறும் 5 நாட்கள் நடை திறக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -