Monday, April 29, 2024

சீனாவின் பங்கு இருந்தும் தப்பித்த ‘பப்ஜி’ (PUBG) கேம் – இதுதான் காரணம்!!

Must Read

நேற்று இரவு மத்திய அரசு 59 சீன ஆஃப்களை தடை செய்ய உத்தரவிட்டது. ஆனால், மத்திய அரசு ஏன் “பப்ஜி” ஆஃப்பை தடை செய்யவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது.

59 ஆஃப்கள் தடை:

கடந்த சில நாட்கள் முன்னால் நம் எல்லை பகுதியான லடாக் பகுதியில் சீன ராணுவம் அத்துமீறி உள்நுழைந்து, நம் ராணுவ வீரர்களுடன் மோதியது. இதனால், நம் நாட்டை சேர்ந்த 20 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

Boycotting Chinese products
Boycotting Chinese products

இதனால் மக்கள் அனைவரும் மிகுந்த கோபம் அடைந்தனர், இனி சீன பொருட்களை வாங்குவதில்லை என்று கூறினர். இதற்கிடையில் மத்திய அரசு நேற்று 59 சீன ஆஃப்களை தடை செய்ய உத்தரவிட்டது. இது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

Chinese App Ban in India
Chinese App Ban in India

ஏன் ” பப்ஜி” தடை இல்லை:

இதற்கிடையில் “பப்ஜி” ஆன்லைன் போர் விளையாட்டான இந்த கேம் எப்படி தப்பித்தது என்ற கேள்வி எழுந்துள்ளது. டிக் டாக் ஆப்பிற்கு அடுத்து இளைஞர்கள் அடிமையாக கிடக்கும் செயலிகளில் ஒன்று பப்ஜி.

 popular multiplayer game PUBG
popular multiplayer game PUBG

இந்த ஆப்பை சீனா உருவாக்கவில்லை, ஆனால் இந்த ஆப் நல்ல வரவேற்பை பெற்றதும் சீனா இந்த ஆப்பை வாங்கியது. இப்படி இருக்க எப்படி இந்த ஆப்பை மத்திய அரசு தடை செய்யவில்லை என்ற கேள்வி உருவாகி உள்ளது.

இது பற்றி மத்திய அமைச்சகங்கள் கூறியதாவது ” இந்த தடை உத்தரவு சீனா உருவாக்கியதா அல்லது வர்த்தக ரீதியாக சம்பந்த பட்டுள்ளதா என்று இல்லை. பயனர்களின் தகவல் திருட்டு என்பது தடைக்கு ஒரே ஒரு அடிப்படை.

PUBG
PUBG

அதனால்தான் இந்த அறிவிப்பு தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்திடமிருந்து வந்தது. இந்த தடை உத்தரவு வர்த்தக அமைச்சகத்திடம் இருந்து வரவில்லை” என்று கூறப்படுகிறது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

மே 1 முதல் அதிரடியாக குறையும் சிலிண்டர் விலை.., காரணம் இது தான்.., வெளியான முக்கிய அப்டேட்!!

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19ம் தேதி முதல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பொதுத்துறை என்னை நிறுவனங்கள்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -