காரசாரமான ஆம்பூர் சிக்கன் கிரேவி ரெசிபி – வீட்டுல செஞ்சு அசத்துங்க!!

0

சிக்கன் என்றாலே அசைவ உணவு பிரியர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒரு உணவு. சிக்கனில் என்ன டிஷ் செய்தலும் அது அசத்தலாகவும் இருக்கும். மேலும் எளிதில் செய்ய கூடிய உணவும் கூட. இப்பொழுது சிக்கனை வைத்து ஆம்பூர் ஸ்டைலில் கிரேவி எப்படி செய்வது என பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

tandoori-chicken-ingredients
tandoori-chicken-ingredients
  • சிக்கன் – 1/2 கி
  • இஞ்சிபூண்டு விழுது – 1 தேக்கரண்டி
  • மஞ்சள்தூள் – 1 தேக்கரண்டி
  • தக்காளி – 2
  • முந்திரி – 10 கி
  • பெரிய வெங்காயம் – 2
  • பச்சைமிளகாய் – 2
  • கொத்தமல்லி – சிறிது
  • பட்டை – சிறிது
  • மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி
  • கரம் மசாலா – 1 தேக்கரண்டி
  • தயிர் – 1 கப்
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை

முதலில் சிக்கனை மஞ்சள்தூள் சேர்த்து நன்கு எடுத்துக்கொள்ளவும். அதில் சிறிது தயிர், இஞ்சிபூண்டு விழுது, மிளகுத்தூள் சேர்த்து நன்கு பிசைந்து 1 நன்கு ஊறவைத்து எடுத்துக்கொள்ளவும். அதன் பிறகு மிக்ஸியில் தக்காளி, இஞ்சி, முந்திரி, வரமிளகாய் மற்றும் கொத்தமல்லி சேர்த்து நன்கு மைபோல அரைத்து கொள்ளவும்.

இப்பொழுது ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் பட்டை, பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கி எடுக்கவும். இப்பொழுது பொன்னிறமாக வதங்கியதும் அதில் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், கரம் மசாலா தூள் சேர்த்து பச்சை வாடை போகும்வரை வதக்கவும்.

chicken ghee roast

இப்பொழுது அரைத்து வைத்த விழுதையும் அதில் சேர்த்து வதக்கி கிரேவி பதத்திற்கு வந்தவுடன் அதில் ஊற வைத்த சிக்கனை சேர்த்து நன்கு கிளறவும். இதனை மூடி போட்டு 15 நிமிடங்கள் கழித்து கொத்தமல்லி தூவி இறக்கினால் சுவையான ஆம்பூர் ஸ்டைல் சிக்கன் கிரேவி தயார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here