தமிழகத்தில் இருமொழி கொள்கையே தொடரும் – சட்டப்பேரவை கூட்டத்தில் ஆளுநர் உரை!!

0

இன்று நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தமிழகத்தில் இருமொழி கொள்கையே தொடரும் என்று அறிவித்துள்ளார். தமிழகத்தில் தமிழ் மொழியினை வளர்ப்பது அரசின் கடமை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சட்டப்பேரவை கூட்டம்

தமிழகத்தில் தேர்தல் நடைபெற இருக்கும் இந்த சுழலில் ஆண்டின் முத்த சட்டப்பேரவை கூட்டம் இன்று கூடியுள்ளது. இந்த கூட்டம் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கருத்தில் கொண்டு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆங்கிலத்தில் உரை நிகழ்த்தினார்.

மீண்டும் ரம்யா பாண்டியனின் மொட்டை மாடி போட்டோ சூட் – ரசிகர்கள் உற்சாகம்!!

Madras High Court upholds disqualification of 18 MLAs | Deccan Herald

அதனை சட்டசபை சபாநாயகர் தனபால் மொழி பெயர்த்தார். இந்த கூட்டத்தில் தமிழக எதிர்க்கட்சிகள் ஆளுநரின் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர். இதனால் சில மணி நேரத்தில் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. அதற்கு பின்பாக ஆளுநர் பல விவகாரங்களை எடுத்துரைத்தார்.

ஆளுநர் உரை

அவர் கூறியதாவது, “தமிழகத்தில் இருமொழி கொள்கையே பின்பற்றப்படும். தமிழ் மொழியினை பாதுகாப்பது அரசின் கடமை ஆகும். சேலம் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சி மையம் விரைவில் செயல்படும். இந்த கொரோனா பெரும் தொற்று காலத்தில் சிறப்பான பங்களிப்பினை அளித்த காவல் துறையினருக்கு பாராட்டுக்கள்”

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

“நிவர் மற்றும் புரவி புயல்களுக்காக வழங்கப்பட இருக்கும் நிதி உதவிகளை மத்திய அரசு விரைவாக வழங்கிட வேண்டும். இந்த புயல்களுக்காக மத்திய அரசு 5264 கோடி வழங்க இருந்தது குறிப்பிடத்தக்கது” இவ்வாறாக தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here