தமிழ் இயக்குனர் அருண்ராஜா காமராஜின் மனைவி சிந்துஜா கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்து உள்ளார். மேலும் இயக்குனர் அருண்ராஜா காமராஜாவிற்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அருண்ராஜா காமராஜ் தமிழ் திரையுலகில் இயக்குனர், நடிகர், பாடகர், பாடலாசிரியராக ஜிகர்தண்டா, தெறி, பென்சில் மற்றும் கபாலி போன்ற படங்களில் பணியாற்றி உள்ளார். ராஜா ராணி படத்தில் அறிமுகமான இவர், மான் கராத்தே படத்தில் சிவா கார்த்திகேயன் நண்பராக நெருப்பு குமார் என்ற கதாப்பாத்திரத்திலும் நடித்துள்ளார். மேலும் சிவகார்த்திகேயன், ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் சத்யராஜ் ஆகியோர் நடித்து தமிழில் வெளியான கனா என்ற படத்தையும் இவர் இயக்கியுள்ளார்.
Facebook => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!
2018 ஆம் ஆண்டு வெளியாகிய இப்படம் கிரிக்கெட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படமாகும்.இந்நிலையில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இவரின் மனைவி சிகிச்சை பலனளிக்காமல் நேற்று காலமானார். பல திரையுலக பிரபலங்களும், தமிழ் ரசிகர்கழும் இவருக்கு ட்விட்டரில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்