கொரோனா பாதிக்காத கிராமம் – எப்படி எங்கே என்று பாருங்களே???

0
கொரோனா பாதிக்காத கிராமம் - எப்படி எங்கே என்று பாருங்களே???
கொரோனா பாதிக்காத கிராமம் - எப்படி எங்கே என்று பாருங்களே???

அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு இடையில் கேரளாவில் உள்ள பழங்குடி குக்ககிராமத்தில் ஒருவருக்கு கூட தொற்று ஏற்படாமல் இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா தடுப்பு மருந்து – டிஆர்டிஓ 2டிஜி மருந்து இன்று அறிமுகம்!!!

கொரோனா பாதிக்காத கிராமம்:

நாட்டின் கிராமப்புறங்களுக்குள் தொற்றுநோய் வேகமாக பரவி வரும் நேரத்தில்; இடூக்கியில் ஒரு சிறிய பழங்குடி குக்கிராமம் உள்ளது. தற்போது இந்த கிராமத்தில் வசிக்கும் ஒருவர் கூட இதுவரையில் கொரோனா தொற்றுக்கு ஆளாகமால் இருப்பது நாட்டு மக்களிடையில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகின்றது.கடந்த ஒன்றரை ஆண்டுகளில் இடுகி மாவட்டத்தின் எடமலாகுடியில் இருந்து ஒரு கோவிட் -19 வழக்கு கூட பதிவாகவில்லை. இது குறித்து கிராமவாசிககள் கூறிய போது,

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

கொரோனா பாதிக்காத கிராமம்:
கொரோனா பாதிக்காத கிராமம்:

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

போதுமான கடின உழைப்பு, கண்காணிப்பு மற்றும் கூட்டு நடவடிக்கைகள் இந்த சாதனையின் பின்னால் உள்ளன.சுமார் 2,250 மக்கள்தொகை கொண்ட இந்த பழங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் நாட்டின் வேறு எந்தப் பகுதிக்கும் போகாமல், உடல் ரீதியான தூரம், கை சுகாதாரம் மற்றும் பயணக் கட்டுப்பாடுகள் போன்ற கோவிட் வழிகாட்டுதல்கள் நடைமுறையில் இருந்து வந்துள்ளனர். விதிகளை மீறுபவர்களுக்கு கண்டிப்பாக அபராதம் விதிக்கப்படும் என்று பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து பாதுகாப்பு நடவடிக்கைளை மேற்கொண்டுவருகின்றனர்.மூணாறில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த கிராமத்தில் வசிக்கும் மக்கள் 24மணி நேரமும் விழிப்புணர்வோடு இருந்து வருகின்றனர், அதாவதுபார்வையாளர்கள் யாரேனும் வந்தால், அவர்கள் அரசு ஊழியர்களாக இருந்தாலும், 48 மணி நேரத்திற்கு முன்பு எடுக்கப்பட்ட ஆர்டி-பி.சி.ஆர் சோதனை அறிக்கையை கொண்டு வர வேண்டும் என்று கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here