‘தளபதி’ ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்து வந்த “தளபதி 65” திரைப்படத்தின் மாஸ் அப்டேட் இன்று 5 மணிக்கு வெளியிடப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அதிகாரப்பூர்வ தகவலின் காரணமாக ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
நடிகர் விஜய்யின் “தளபதி 65”
எப்போதுமே நடிகர் விஜய்யின் திரைப்படம் ஒவ்வொரு தீபாவளிக்கு வெளியிடப்படும். அதே போல் வருடத்திற்கு ஒரு படம் என்று தான் நடிகர் விஜய் நடித்து வருகிறார். அவர் நடிக்கும் அனைத்து திரைப்படங்களும் மெகா ஹிட் அடித்து விடுகிறது. ஆனால், கடந்த ஆண்டு கொரோனா நோய் பரவல் காரணமாக நடிகர் விஜய்யின் “மாஸ்டர்” திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதம் வெளியிடப்பட வேண்டிய திரைப்படம் இந்த ஆண்டு பொங்கலுக்கு தான் வெளிவந்தது.
யப்பா..,மாரி செல்வராஜ் என்னையா படம் பண்ணிருக்க – கர்ணன் பட டீஸர் “ரெஸ்பான்ஸ்”!!
“மாஸ்டர்” திரைப்படம் வெளிவந்து மாஸ் ஹிட் அடித்ததை அடுத்து தற்போது “தளபதி” இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் “தளபதி 65” என்று கூறப்படும் பெயரிடப்படாத திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். “சன் பிச்சர்ஸ்” நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் ரஷியாவில் நடைபெற்று வருகின்றது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இன்று 5 மணிக்கு “தளபதி 65” திரைப்படத்தின் அப்டேட் இருக்கும் என்று “சன் பிக்சர்ஸ்” நிறுவனம் தெரிவித்திருந்தது. இதனை அடுத்து தற்போது அந்த படத்தின் கதாநாயகியாக நடிகை பூஜா ஹெட்டே நடிக்க இருக்கிறார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The gorgeous @hegdepooja onboard as the female lead of #Thalapathy65 !@actorvijay @Nelsondilpkumar @anirudhofficial#Thalapathy65bySunPictures #PoojaHegdeInThalapathy65 pic.twitter.com/flp4izppAk
— Sun Pictures (@sunpictures) March 24, 2021