ட்ரைலரே அலற விட்ருக்கீங்களே கார்த்தி – சுல்தான் பட மரண மாஸ் அப்டேட்!!

0

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் அளவிற்கு வளர்ந்துகொண்டிற்கும் கார்த்தி தற்போது சுல்தான் படத்தில் நடித்து வருகிறார். பல சண்டைக்காட்சிகளுடன் ட்ரைலர் வெளியாகியுள்ளது. இதனால் அவரது ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

கார்த்தியின் சுல்தான்

தமிழ் திரையுலகில் அந்த காலத்து நடிகரான சிவகுமாரின் மகன் கார்த்தி தற்போது தொடர்ந்து பல வெற்றி படங்களை கொடுத்து வருகிறார். என்ன தான் சூர்யா முதலில் நடிக்க வந்தாலும் கார்த்தி தற்போது அவரை ஓவர் டேக் செய்து வருகிறார் என்று தான் சொல்ல வேண்டும். சூர்யாவிற்கு பெண் ரசிகர்கள் ஏராளம், கார்த்திக்கிற்கும் அதே போல தான். பல ஆக்சன் படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்தவர்.

இவர் நடிக்கும் முக்கால் வாசி கதாபாத்திரங்கள் ரவுடி கெட்டப் தான். இவரது எதார்த்த நடிப்பு மக்களுக்கு பிடித்தும் போனது. லாக்டவுன் சமயத்தால் படவாய்ப்புகள் இல்லாமல் தவித்து வந்தார். அதன் பிறகே அவருக்கு சுல்தான் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தற்போது சுல்தான் படத்தின் படப்பிடிப்புகள் யாவும் நிறைவடைந்தது. ஏற்கனவே ‘எப்படி இருந்த நாங்க’ என்ற பாடல் ரிலீஸ் ஆனது.

தற்போது புது அப்டேட் ஒன்றை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். அதாவது இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகும் தேதியை ட்விட்டரில் வெளியிட்டிருந்தது.  இந்த படத்தை ரெமோ படத்தை இயக்கிய பாக்யராஜ் கண்ணன் இயக்குகிறார். ட்ரீம் வாரியர் பிக்ச்சர் இதனை தயாரிக்கிறது. இதில் ரஷ்மிகா மந்தனா கார்த்திக்கு ஜோடியாக நடிக்கிறார். இதனால் இப்படத்திற்கு எதிர்பார்ப்புகள் அதிகரித்து வருகிறது. தற்போது ட்ரைலர் வெளியாகியுள்ளது. நெப்போலியன் போன்ற முக்கிய நடிகர்கள் பலரும் நடித்திருக்கின்றனர். ஆங்கங்கே ராஷ்மிகா மந்தனா வரும் காட்சிகள் ரசிக்கும்படி உள்ளன. பல சண்டை காட்சிகளுடன் வெறித்தனமாக உள்ளது சுல்தான் படத்தின் ட்ரைலர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here