விஜய் சேதுபதியுடன் பைக் ரைடு போகும் குக் வித் கோமாளி புகழ் – வைரலாகும் ஷூட்டிங் புகைப்படம்!!

0
pugazh

நடிகர் விஜய் சேதுபதி நடித்து வரும் புதிய திரைப்படத்தில் குக் வித் கோமாளி புகழ் தற்போது நடித்து வருகிறார். விஜய் சேதுபதியுடன் புகழ் நடித்துள்ள காட்சிகள் வெளியாகி இணையத்தையே கலக்கி வருகிறது.

குக் வித் கோமாளி புகழ்

உங்களுக்கு எது பிடிக்குதோ அத விடாம முயற்சி பண்ணிட்டே இருங்க, அந்த விஷயம் அதுவாவே உங்கள தேடி வரும். இத சொன்னது நம்ம குக் வித் கோமாளி புகழ். இந்த வரிகளை சொன்ன புகழே இந்த வரிகளுக்கு ஏற்ற சரியான ஆள் என்றே கூறலாம். ஒவ்வொருவருக்கும் சில ஆசைகள், கனவுகள் இருக்கும். ஆனால் அந்த ஆசைகளையும் கனவுகளையும் அடைந்து கொள்பவர்கள் வெகு சிலரே.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதற்கு காரணம் அந்த விஷயத்தில் அவர்கள் எடுக்கின்ற விடா முயற்சி. விடாமல் முயற்சி செய்தால் விரும்பியவற்றை அடையலாம் என்பதற்கு சிறந்த உதாரணமாக இருப்பவர் குக் வித் கோமாளி புகழ். தனக்கென வந்தவற்றை விரும்பி ஏற்றுக்கொண்டு இன்று மக்கள் மனதின் விருப்பமாக இருப்பவர் புகழ்.

யப்பா..,மாரி செல்வராஜ் என்னையா படம் பண்ணிருக்க – கர்ணன் பட டீஸர் “ரெஸ்பான்ஸ்”!!

தனது விடா முயற்சியால் சின்னத்திரை நகைச்சுவை நடிகர் என்ற அந்தஸ்திலிருந்து வெள்ளித்திரை வரை உயர்ந்துள்ளார் இவர். விஜய் டிவி நிகழ்ச்சிகளில், சிறிய வேடங்களில், முகம் கூட சரியாக தெரியாத சூழலில் நடித்து வந்த புகழ் இன்று உலகப்புகழ் பெற்ற பிரபலம். குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்த புகழ், தற்போது சினிமாவில் நடித்துக்கொண்டிருக்கிறார்.

விஜய்யுடன் ஒரு படம், அஜித்துடன் ஒரு படம், விஜய் சேதுபதியுடன் ஒரு படம் என பிசியாக இருக்கிறார் புகழ். இவ்வாறு இருக்க நடிகர் விஜய் சேதுபதியுடன் புகழ் நடித்து வரும் திரைப்படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த காட்சிகள் தற்போது ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here