Friday, May 17, 2024

#INDvsAUS 3வது டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெறும் – ஆஸ்திரேலியா கிரிக்கெட் திட்டவட்டம்!!

Must Read

ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னியில் திட்டமிட்டபடி மூன்றாவது டெஸ்ட் போட்டிகள் நடைபெறும் என்று ஆஸ்திரேலியாவின் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இந்த மூன்றாவது டெஸ்ட் போட்டிகள் வரும் ஜனவரி மாதம் 7 ஆம் தேதி துவங்க உள்ளது.

ஆஸ்திரேலியா – இந்திய கிரிக்கெட் போட்டிகள்:

ஆஸ்திரேலியா மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகள் தொடர்ச்சியாக டெஸ்ட், ஒருநாள் போட்டி தொடர்களில் விளையாடி வருகின்றது. இந்த போட்டிகளுக்காக இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. ஒரு நாள் தொடரில் விளையாடிய இந்திய அணி 1-2 என்ற கணக்கில் தோல்வியுற்றது. இப்படியாக இருந்தாலும், டி 20 போட்டி தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி அடைந்தது. டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி பதிலடி கொடுக்கும் நோக்கத்தில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி அடைந்தது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

பின், மெர்போர்னில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் இருந்த வீரர்கள் வெற்றிக்காக கடுமையாக போராடி 8 விக்கெட்களை வீழ்த்தி அபாரமாக வெற்றி அடைந்தனர். இதன் மூலமாக போட்டி தொடர் சமன் செய்யப்பட்டது. இப்படியான நிலையில் அடுத்த மூன்றாவது டெஸ்ட் போட்டி வரும் ஜனவரி மாதம் 7 ஆம் தேதி நடைபெற இருந்தது. பின், நான்காவது டெஸ்ட் போட்டி ஜனவரி 15 ஆம் தேதி துவங்க உள்ளது.

ரூ.1100 கோடி பட்ஜெட், 3½ ஆண்டுகள் கட்டுமானம் – அயோத்தி ராமர் கோவில் அம்சங்கள்!!

இப்படியான நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டி நடைபெற இருந்த நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்து வருவதாக செய்திகள் வெளியானது. அதோடு போட்டிகள் சிட்டினில் நடைபெறாமல் மெல்போர்னில் நடைபெறும் என்று செய்திகள் வெளியானது. இந்த குழப்பத்திற்கு முற்று புள்ளி வைத்த ஆஸ்திரேலியா கிரிக்கெட் அமைப்பு மூன்றாவது டெஸ்ட் போட்டிகள் திட்டமிட்டபடி சிட்னியில் நடைபெறும் என்று அறிவித்துள்ளது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

IPL Points Table: 3வது அணியாக PlayOff சுற்றுக்கு தகுதி பெற்ற SRH.. மற்ற அணிகளின் நிலை என்ன??

ஐபிஎல் தொடரின் 17வது சீசன் விறுவிறுப்பாகவும், கடைசி ஓவர் வரை, வெற்றி யார் பக்கம் இருக்கும் என்று எதிர்பார்ப்புடன் கடந்த மார்ச் 22ம் தேதி முதல்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -