இந்தியாவில் கொரோனா தடுப்பூசி முன்னோட்டம் வெற்றி – சுகாதாரத்துறை தகவல்!!

0

தற்போது நாடு முழுவதும் கொரோனா பரவி வரும் நிலையில் அதற்கான தடுப்பு மருந்துகளை கண்டுபிடிக்க பல வல்லுநர்கள் தீவிரமாக ஆராய்ச்சியில் இறங்கி வருகின்றனர். இந்நிலையில் தற்போது தடுப்பூசிக்கான முன்னோட்டங்கள் நடந்துகொண்டுள்ளது.

கொரோனா தடுப்பூசி

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள உலக நாடுகள்  முழுவதும் பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கின்றன. இந்தியாவிலும் அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போது அரசு கோவிட் 19 தடுப்பூசியை மக்கள் அனைவருக்கும் கொண்டு சேர்க்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, தடுப்பூசி போடுவதற்கு நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

corono treatment
corono treatment

சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நர்ஸுகளுக்கு தடுப்பூசி போட பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. முன்கள பணியாளர்களுக்கும், தன்னார்வலர்களுக்கும் தேவையான பயிற்சிகள் வழங்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக கொரோனா தடுப்பூசி முன்னோட்டம் நாட்டின் சில பகுதிகளில் செயல் படுத்தப்படுகிறது. கொரோனா தடுப்பூசியை மக்களுக்கு கொண்டு சேர்ப்பதில் உள்ள சிக்கல்கள் குறித்து அறிந்து கொள்ளவே இந்த முன்னோட்டம் நடத்தப்படுதுகிறது.

இந்நிலையில் அஸ்ஸாம், ஆந்திரா உள்ளிட்ட 4 மாநிலங்களில் நடத்தப்பட்ட கொரோனா தடுப்பூசி முன்னோட்டம் வெற்றி பெற்றதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்  தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது. மேலும்  பயனாளிகளின் தகவல்களை பராமரித்தல் மற்றும் ஒதுக்கீடு ஆகியவற்றில் முன்னோட்டம் நடைபெற்றதாகவும் கூறியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here