Wednesday, May 15, 2024

ரூ.1100 கோடி பட்ஜெட், 3½ ஆண்டுகள் கட்டுமானம் – அயோத்தி ராமர் கோவில் அம்சங்கள்!!

Must Read

அயோத்தியில் பிரமாண்டமாக அமைய இருக்கும் ராமர் கோவில் இன்னும் 3½ ஆண்டுகளுக்குள் கட்டி முடிக்கப்படும் என்று ஸ்ரீ ராம் ஜனம்பூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை பொருளாளர் தெரிவித்துள்ளார். கோவில் கட்டுவதற்கு ஒட்டுமொத்தமாக 1100 கோடி ரூபாய் செலவு செய்யப்படும் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அயோத்தியின் ராமர் கோவில்:

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தி மாநகரில் பிரமாண்டமாக ராமர் கோவில் உருவாக உள்ளது. இந்த கோவிலை கட்ட மத்திய அரசிற்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்திருந்த நிலையில் கோவில் கட்டுவதற்கான பணிகள் துரிதமாக ஆரம்பிக்கப்பட்டன. முதற்கட்டமாக, கோவிலின் அடிக்கல் பிரதமர் நரேந்திர மோடியால் கடந்த ஆகஸ்ட் மாதம் நடப்பட்டது. அதே போல் கோவில் கட்டும் பணிகளை மேற்கொள்ள என்று மத்திய அரசு சார்பில் ஸ்ரீ ராம் ஜனம்பூமி தீர்த்த க்ஷேத்ரா என்ற பெயரில் அறக்கட்டளை அமைக்கப்பட்டது.

கர்ப்பமான விஷயத்தை குடும்பத்திடம் சொல்லிவிடும் தனம் – உற்சாகத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்!!

இந்த அறக்கட்டளை கோவில் கட்டுவதற்கு தேவையான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த கோவில் 360 அடி நீளம், 235 அடி அகலம், 161 அடி உயரத்தில் 3 தளங்கள் மற்றும் 5 கோபுரங்களுடன் அமைய பெற உள்ளது. இது மட்டுமின்றி, கூடுதல் சிறப்பாக எந்த இரும்பு பொருட்களும் பயன்படுத்தப்படாமல் வெறும் இளம்சிவப்பு கற்களுடன் கோவில் கட்டப்பட உள்ளது. இத்தனை சிறப்புகளுடன் இந்த கோவில் அமைய பெற உள்ளதாக அந்த அறக்கட்டளையின் பொருளாளர் ஸ்வாமி கோவிந்த் தேவ் கிரிஜி மகாராஜ் தெரிவித்துள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும், அவர் கூறியதாவது, “கோவில் கட்ட ஒட்டுமொத்தமாக 300 முதல் 400 கோடி வரை செலவாகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. ஆனால், கோவில் உட்கட்டமைப்பு, சுற்றியுள்ள வளாகம் போன்றவை அமைக்க ஒட்டுமொத்தமாக 1100 கோடி வரை செலவாகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. கோவிலின் வலுவான அடித்தளத்தை உருவாக்க மும்பை, டெல்லி மற்றும் கவுகாத்தி மாநகரங்களில் உள்ள ஐஐடியை சேர்ந்த வல்லுநர்கள் மற்றும் “டாடா” குழுமத்தின் சிறந்த பொறியாளர்கள் திட்டம் வகுக்க உள்ளனர். கோவில் கட்ட தற்போது வரை அறக்கட்டளைக்கு 100 கோடிக்கு மேல் நன்கொடை கிடைத்துள்ளது” இவ்வாறாக தெரிவித்துள்ளார்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு இவ்ளோ தான்? சொந்த வாகனம் கூட இல்லை? பிரமாணப் பத்திரம் தாக்கல்!!!

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறும் நிலையில், 4வது கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நேற்றுடன் (மே 13) முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து வரும் 20ஆம்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -