Sunday, May 5, 2024

மகர விளக்கு பூஜைக்காக சபரிமலையில் நடைதிறப்பு – தினசரி 5000 பக்தர்கள் அனுமதி!!

Must Read

மகர விளக்கு பூஜைக்காக நாளை முதல் சபரிமலையில் நடை திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் அச்சம் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதே போல் தினசரியாக 5000 பக்தர்கள் தரிசனம் மேற்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் அச்சம்:

கொரோனா பரவல் அச்சம் காரணமாக நாட்டில் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. இந்த நிலையில் கடந்த நவம்பர் மாதம் கேரளாவில் உள்ள சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் 15 ஆம் தேதி தரிசனத்திற்காக நடை திறக்கப்பட்டது. அதன் பிறகு பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் குறைந்த அளவு பக்தர்களுடன் பூஜைகள் நடைபெற்றது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் கடுமையாக பின்பற்றப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. பக்தர்கள் ஆன்லைன் வாயிலாக முன்பதிவு செய்து தரிசனம் மேற்கொண்டனர்.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

41 நாட்கள் தொடர்ச்சியாக பூஜைகள் நடைபெற்று, கடந்த 26 ஆம் தேதி மண்டல பூஜை நடைபெற்றது. இதற்கு பின்பாக நடை சாத்தப்பட்டது. தற்போது மகர விளக்கு பூஜைக்காக நாளை முதல் நடை திறக்கப்பட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு வரும் 31 ஆம் தேதி அதிகாலை 5 மணி முதல் நடை திறக்கப்பட்டு விடும். அப்போது பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர்.

அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்த ரஜினிகாந்த் – கருத்து தெரிவிக்கும் பிரபலங்கள்!!

5000 பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மகர ஜோதி பூஜை வரும் ஜனவரி மாதம் 14 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதன் பின்பு 19 ஆம் தேதி வரை பக்தர்கள் ஸ்வாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர். இந்த தரிசனத்திற்காக முன்பதிவு நேற்று முதல் துவங்கப்பட்டுள்ளது. இந்த பூஜைகள் முடிந்ததற்கு பிறகு இந்த ஆண்டிற்கான மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைகள் நிறைவு பெற்றுவிடும்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

PF சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட்., ரூ.50,000 வரையிலும் போனஸ் கிடைக்கும்? EPFO-வின் மாஸ் விதிகள்!!!

அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வூதிய கால நலன் கருதி, மாதாந்திர ஊதியத்தில் PF தொகை பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு பிடித்தம்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -