அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்த ரஜினிகாந்த் – கருத்து தெரிவிக்கும் பிரபலங்கள்!!

0

ரஜினிகாந்த் விரைவில் கட்சி தொடங்குவார் என எதிர்பார்த்துக்கொண்டிருந்த அவரது ரசிகர்களுக்கும் தொண்டர்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் விதமாக உடல் நிலை காரணமாக கட்சி தொடங்கவில்லை எனவும், அரசியலுக்கு வராமல் மக்களுக்கு தேவையான நல்லதை செய்வேன் என்றும் ரஜினிகாந்த் கூறியிருக்கிறார். இது பற்றி பலரும் தங்களது கருத்துகளை கூறி வருகின்றனர்.

ரஜினிகாந்த்

வரும் ஜனவரியில் கட்சி ஆரம்பிப்பதாகவும், அதற்கான அறிவிப்பு டிசம்பர் 31 அன்று வெளியாகும் எனவும் ரஜினிகாந்த் சில நாட்களுக்கு முன்பு அறிவித்திருந்தார். இந்நிலையில் அண்ணாத்த படப்பிடிப்புக்காக ஹைதராபாத் சென்றிருந்த அவருக்கு கொரோனா தொற்று இருப்பதாக தகவல் பரவியது. பிறகு அது இல்லை என உறுதி செய்யப்பட்டு அவர் சென்னை திரும்பவிருந்த நிலையில் உடல்நலம் பாதிக்கப்பட்டு ஹைதராபாத் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அவர் விரைவில் குணமடைந்து கட்சி வேலைகளை ஆரம்பிப்பார் என எதிர்பார்த்துக்கொண்டிருந்த போது அவரது இந்த அறிவிப்பு பெரிதும் ஏமாற்றம் அளிப்பதாகவே உள்ளது. இது பற்றி பிரபலங்கள் தங்களது கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். “ரஜினி கட்சி தொடங்கவில்லை என்பது எனக்கு இப்போதுதான் தெரியும்” என ரஜினியின் அண்ணன் சத்யநாராயணா கூறியுள்ள நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்,சீமான் “ரஜினியின் இந்த முடிவை நான் மனதார ஏற்கிறேன்” என்று கூறியுள்ளார்.

மேலும் “உடல் நிலையை கருத்தில் கொண்டு ரஜினி அரசியலை விட்டு ஒதுங்கி இருப்பது தான் நல்லது” என பொன்முடி தெரிவித்துள்ளார். ஆடிட்டர் குருமூர்த்தி இதுபற்றி கூறுகையில், “1996 ம் ஆண்டு போலவே ரஜினி வாய்ஸ் அரசியலில் ஈடுபடுவார்” என தெரிவித்துள்ளார். இந்நிலையில் அர்ஜுனன் மூர்த்திக்கும், தமிழருவி மணியனுக்கும் நன்றி எனக்கூறியதுடன், தன் மீதான 24 ஆண்டுகால அரசியல் எதிர்பார்ப்புக்கு முற்று புள்ளி வைத்துள்ளார் ரஜினிகாந்த்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here