பள்ளி மாணவர்களுக்காக வழங்கப்படும் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரைக்கான புத்தகங்களை மயிலாடுதுறையில் பழைய இரும்பு கடையில் பதுக்கியுள்ளார்கள். இதனை தெரிந்த வருமானத்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு இதனை கண்டுபிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புத்தகங்கள் பதுக்கல்:
பல்வேறு துறைகளில் ஊழல் மற்றும் பொருட்களை பதுக்குதல் போன்ற சம்பவங்கள் இன்னும் நடந்து கொண்டு தான் வருகிறது . இதனை தடுப்பதற்காக பல பிரிவுகளில் தனி படை அமைத்தும் சில தவறுகள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. அதிகாரிகளின் திடீர் ரைடினால் சிலர் மாட்டிக்கொள்கின்றனர். தற்போது மயிலாடுதுறைல் ஓர் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இது அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
மயிலாடுதுறையில் உள்ள ஓர் இரும்பு கடைகளில் 2019-20 கான கல்வியாண்டுக்கான 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான பாட புத்தகங்கள் பதிக்கிவைக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் மொத்த எடை சுமார் 2000 கிலோ ஆகும். மொத்தம் 3,134 புத்தகங்கள் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இதனை மயிலாடுதுறை வருவாய் கோட்டாசிரியர் தலைமையில் வருவாய்த்துறை அதிகாரிகள் இந்த அதிரடி ரைடை நடத்தி புத்தகங்களை கைப்பற்றியுள்ளனர்.
இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் மயிலாடுதுறை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இரும்பு கடையின் உரிமையாளர் பெருமாள்சாமி மீதும் மற்றும் இந்த புத்தகங்களை விற்ற மாவட்ட கல்வி அலுவலக உதவியாளர் மோகநாதன் என்பவர் மீதும் போலீசார் 5 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உணவு பொருள், பணம் போன்றவற்றை பதுக்கிவைக்க ஆரம்பித்தவர்கள் தற்போது பாடப்புத்தகங்களை பதுக்கிவைப்பது வேதனைக்குரியதே.