இனி கார்களில் ஏர்பேக் கட்டாயம் – மத்திய அரசு புதிய சட்டம்!!

0

இனி வரும் காலங்களில் ஓட்டுநர் சீட் மட்டுமின்றி முன்பக்கத்தில் இருக்கும் மற்றொரு சீட்டிலும் ஏர்பேக் வசதி கட்டாயமாக இருக்க வேண்டும் என்ற புதிய சட்டத்தை மத்திய அரசு புதிய சட்டம் ஒன்றை பிறப்பித்துள்ளது.

ஏர்பேக்:

இன்றைய காலங்களில் சாலை விபத்துகள் அதிகரித்து கொண்டே இருக்கின்றது. இதனால் ஓர் ஆண்டில் பல உயிர்கள் பறிபோகிறது. இதனை தடுப்பதற்கு அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் இப்போது 4 சக்கர வாகனங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. தற்போது புதிய சட்டம் ஒன்றை பிறப்பித்துள்ளது மத்திய அரசு. இதனை மத்திய போக்குவரத்து அரசு சார்பாக மத்திய அரசு ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அது என்னவென்றால் தற்போது வரும் கார்கள் அனைத்திலும் ஏதும் விபத்து ஏற்பட்டால் அப்போது ஓட்டுனரின் முன் பக்கத்தில் இருந்து அவரது உயிர் காப்பதற்காக ஏர் பேக் வரும் வசதி இருக்கிறது. இதனால் ஓட்டுநர் காயங்களுடன் உயிர் தப்பிப்பர். உயிர் சேதம் எதுவும் ஏற்படாது. தற்போது அதே போல் புதிய திட்டம் ஒன்றை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. முன் பக்கத்தில் அமரும் ஓட்டுநர் மட்டுமின்றி அவர் அருகே அமர்த்திருப்பவருக்கும் உயிர் சேதம் எதுவும் ஆக கூடாது.

எனவே ஓட்டுனருக்கு அருகில் இருப்பவருக்கும் ஏர் பேக் வசதி அமைக்கப்படவேண்டும் என்று அறிவித்துள்ளது. மேலும் இதற்காக அனைத்து வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கும் கால அவகாசம் கொடுக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது. மேலும் வரும் ஆண்டு 2021 பிப்ரவரி மாதம் முதல் 2 ஏர் பேக் முன் பகுதிகளில் பெற்றிருக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் அடுத்த ஆண்டு முதல் கார்களின் விலை சுமார் 5000 முதல் 8000 வரை உயரலாம் என்று தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here