Monday, May 13, 2024

பள்ளி வளாகத்தை உரிமையாளரிடம் ஒப்படைக்க வேண்டும் – லதா ரஜினிகாந்திற்கு நீதிமன்றம் எச்சரிக்கை!!

Must Read

ஆஸ்ரம் பள்ளி வளாகத்தை 2021ம் ஆண்டு ஏப்ரல் மாதத்துக்குள் அந்த இடத்தின் உரிமையாளரிடம் ஒப்படைக்காவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என லதா ரஜினிகாந்த்க்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஆஸ்ரம் பள்ளி:

ஸ்ரீ ராகவேந்திரா கல்விச் சங்கத்தின் செயலாளர் லதா ரஜினிகாந்த். இவர் சென்னை கிண்டியில் ஆஸ்ரம் என்ற பெயரில் பள்ளியை நடத்தி வருகிறார். இந்த இடம் வெங்கடேஸ்வரலு, பூர்ணச்சந்திர ராவ்க்கு சொந்தமானது. இவர் இந்த இடத்திற்கான வாடகை தரவில்லை என அந்த இடத்தின் உரிமையாளர்கள் ஆஸ்ரம் பள்ளியை காலி செய்து தரக்கோரி நீதிமன்றத்தில் மனு அளித்தனர். 2014ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் இட உரிமையாளர்கள் 2013-ஆம் ஆண்டு மார்ச் வரையிலான வாடகை பாக்கி ஒரு கோடியே 99 லட்சத்தை செலுத்த உத்தரவிடக்கோரி வழக்கு தொடர்ந்தனர்.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் இருக்கும் போது அந்த இடத்தின் உரிமையாளர்கள் 2017ஆம் ஆண்டு திடீரென்று பள்ளியின் கேட்டை பூட்டினர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. பின்னர் நீதிமன்ற உத்தரவுவின் படி பள்ளி திறக்கப்பட்டது. நீதிமன்ற உத்தரவுபடி பள்ளி நடைபெற்று வரும் நிலையில் மீண்டும் 2018ம் ஆண்டு வாடகை பிரச்சனை எழுந்தது. அப்போது இட உரிமையாளர்களும் ஆஸ்ரம் பள்ளி நிர்வாகமும் இணைந்து ஒப்பந்தம் போட்டது. அதன் படி, 2020ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் இடத்தை காலி செய்து உரிமையாளரிடம் ஒப்படைக்க வேண்டும். இதற்கு ஸ்ரீராகவேந்திரா கல்வி சங்கமும் ஒப்புக்கொண்டது.

நீதிமன்ற எச்சரிக்கை:

இந்நிலையில், கொரோனா பரவல் காரணமாக இடத்தை காலி செய்ய முடியாததால், மேலும் ஒரு வருடம் அவகாசம் வேண்டி ஸ்ரீராகவேந்திரா சங்கத்தின் சார்பில் அதன் செயலாளர் லதா ரஜினிகாந்த் சென்னை உயர் நீதிமன்றத்தில் இடத்தின் உரிமையாளர்கள் தொடர்ந்த வழக்கின் மேல் கூடுதல் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கு டிசம்பர் 14ல் விசாரணைக்கு வந்தது. மாத வாடகை மற்றும் டிடிஎஸ் தொகை உட்பட 8லட்ச ரூபாயை முறையாக செலுத்தி வருவதாகவும், இந்த கல்வி ஆண்டு முடியும் வரை கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் எனவும் நீதிமன்றத்தில் ஆஸ்ரம் பள்ளி சார்பாக கேட்டுக்கொண்டனர்.

“காத்துவக்குல ரெண்டு காதல்” சூட்டிங்கில் சமந்தா – பூங்கொத்து கொடுத்து வரவேற்ற விக்கி! வைரல் வீடியோ!!

நீதிபதி சதீஷ்குமார் ஸ்ரீராகவேந்திரா கல்வி சங்கம் சார்பாக இயங்கி வரும் ஆஸ்ரம் பள்ளி கிண்டியில் 2021ம்ஆண்டு ஏப்ரல் 30ம் தேதி வரை இயங்க அவகாசம் வழங்கி உத்தரவிட்டார். ஏப்ரல் 30ம் தேதிக்குள் காலி செய்யாவிட்டால், கல்வி சங்கம் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க நேரிடும் என செயலாளர் லதா ரஜினிகாந்தை நீதிபதி எச்சரித்துள்ளார். மேலும், ஆஸ்ரம் பள்ளி 2021-22ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கையை தற்போது இயங்கும் முகவரியில் நடத்தக்கூடாது என ஸ்ரீ ராகவேந்திரா கல்வி சங்கத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

மதுரையில் வெளுத்து வாங்கும் கனமழை., வைகை ஆற்றில் வெள்ள அபாயம்? வெளியான முக்கிய அறிவிப்பு!!!

சமீபகாலமாக கோடை வெயில் தாக்கம் அதிகமாக இருந்து வந்த நிலையில், குமரி கடல் பகுதியில் மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும் மழை...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -