Monday, April 29, 2024

தமிழகத்தில் 10 மடங்காக உயர்ந்த ‘நிமோனியா பரவல்’ – அதிர்ச்சி ரிப்போர்ட்!!

Must Read

தமிழகத்தில் தற்போது கொரோனா பாதிப்பு அதிக அளவில் குறைந்து வருகின்றது. சில மாவட்டங்களில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10 நபர்களுக்கும் கீழே உள்ளது. இது இப்படியாக இருந்தாலும் நிமோனியா காய்ச்சல் பரவல் அதிகரித்து வருகின்றது.

கொரோனா நோய் தொற்று:

நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து கொரோனா என்ற பெரும் தொற்று பரவி வருகின்றது. இதனை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பெருமளவில் முயற்சிகளையும் நடவடிக்கைகளையும் எடுத்து வந்தது. நாள் ஒன்றிற்கு ஒரு மாவட்டத்தில் குறைந்தபட்சம் 1000 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டது அனைவரையும் அச்சம் அடைய வைத்தது. ஆனால், கடந்த மாதத்தில் இருந்து பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும், இந்த நோயால் இறப்பவர்கள் எண்ணிக்கையும் குறைந்து வருகின்றது.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

தமிழகத்திலும் கொரோனா நோய் பரவல் மற்றும் இறப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகின்றது. கடந்த ஒரு நாளில் மட்டும் 1,203 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். தலைநகர் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 343 என்ற கணக்கில் உள்ளது. 8 மாவட்டங்களில் 10 நபர்களுக்கும் கீழே பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை பதிவாகியுள்ளது. பெரம்பலூரில் இரண்டாவது நாளாக கொரோனாவால் யாரும் பாதிக்கப்படவில்லை. ஒரே நாளில் தமிழகத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 என்ற கணக்கில் பதிவாகியுள்ளது.

அமெரிக்க அதிபர் ஆக ஜோ பைடன் தேர்வு – அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

கொரோனா பரவல் இப்படி தொடர்ச்சியாக குறைந்து வருகின்றது. ஆனால், நிமோனியா காய்ச்சல் பரவல் இந்த ஆண்டு எப்போது இல்லாத அளவு தமிழகத்தில் 10 மடங்கு அதிகரித்துள்ளதாக அதிர்ச்சி தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் தமிழகத்தில் 500 பேர் நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்படுவர். ஆனால், இந்த ஆண்டு என்றும் இல்லாத அளவாக 5000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நிமோனியாவால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

T20 உலக கோப்பை 2024: மே மாதத்தில் அமெரிக்கா செல்லும் இந்திய அணி.. முழு விவரம் உள்ளே!!

இந்தியாவில் IPL தொடரின் 17வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதை நாம் அறிவோம். இத்தொடருக்கு பிறகு வரும் ஜூன் மாதம் 2ம் தேதி முதல் T20...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -