அமெரிக்க அதிபர் ஆக ஜோ பைடன் தேர்வு – அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

0

அமெரிக்கா அதிபர் தேர்தலில் ட்ரம்ப் தோல்வியை தழுவிய நிலையில் வாக்கு எண்ணிக்கையில் தவறு நடந்திருப்பதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தற்போது தேர்வாணைய குழு ஜோ பைடனை அமெரிக்காவின் புது அதிபராக அறிவித்து உள்ளனர். இதனால் வருகிற ஜனவரி 20-க்கு மேல் அவர் பதவி ஏற்பார் என தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்கா அதிபர் தேர்தல்:

2016-ஆம் ஆண்டு ட்ரம்ப அமெரிக்க அதிபராக பதவி ஏற்றார். 4 ஆண்டுகள் ஆட்சி செய்தபின் தற்போது 2020-ல் நடந்து முடிந்த தேர்தலில் தோல்வியை கண்டார். ஆனால் அந்த தோல்வியை ஒப்புக்கொள்ளாத ட்ரம்ப் நீதிமன்றத்தை அணுகினார். இது குறித்து நடந்து முடிந்த விசாரணையில் தற்போது ஜோ பைடன் வெற்றி பெற்றதாக தேர்வு குழு அறிவித்தது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ட்ரம்ப் தோல்வி குறித்து வெளியிட்ட தகவலின்படி ட்ரம்ப் விதிகளை மீறுபவராக உள்ளார். அவருடைய பலமே பலவீனமாக மாறிய காரணத்தால் அவருக்கு அதிகம் மக்கள் வாக்கு அளிக்கவில்லை. ஆகையால் 2020-ல் நடந்து முடிந்த வாக்குபதிவில் அவர் தோல்வியை தழுவினார்.

தற்போது மக்களாட்சி கட்சியின் உறுப்பினரான ஜோ பைடன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி 20-ஆம் தேதியில் அவர் பதவி ஏற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து அவர் கூறியதாவது,” ட்ரம்ப் இப்டி நடந்து கொள்வது எனக்கு மிகவும் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது, இது ஜனாதிபதி மரபிற்கு உதவாது என மிகவும் வெளிப்படையாக கூறினார். ஜனவரி 20-க்கு மேல் புதிய மாற்றங்களை அமெரிக்கா மக்கள் புரிந்து கொள்வார்கள்” இவ்வாறு அவர் கூறினார்.

ரஜினியின் மக்கள் சேவை கட்சிக்கு “ஆட்டோ” சின்னம்!!

இறுதியாக தேர்வாணைய குழு அறிக்கையில் அமெரிக்க அதிபர் தேர்தலில் பைடன் 306 வாக்குகளையும் பெற்று வெற்றி பெற்றதாகவும், ட்ரம்ப் 232 வாக்குகளை பெற்றதாகவும் அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here