ரஜினியின் மக்கள் சேவை கட்சிக்கு “ஆட்டோ” சின்னம் – தேர்தல் ஆணையம் தகவல்!!

0
rajnikanth

நடிகர் ரஜினிகாந்த் ஜனவரி மாதம் புதிய கட்சி ஆரம்பிக்க போவதாகவும் அதற்க்கான அறிவிப்பு டிசம்பர் மாதம் வெளியாகும் எனவும் தெரிவித்தார். இந்நிலையில் அவர் “மக்கள் சேவை கட்சி” என்ற பெயரில் கட்சியை ஆரம்பிக்க போவதாக தேர்தல் ஆணையத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மக்கள் சேவை கட்சி

நடிகர் ரஜினிகாந்த் புதிதாக தொடங்கவுள்ள கட்சியின் பெயரை தேர்தல் ஆணையம் அறிவித்தது. மேலும் 234 தொகுதிகளில் போட்டியிடுவதற்க்கான சின்னத்தையும் ஒதுக்கியுள்ளது தேர்தல் ஆணையம். பாபா முத்திரையை சின்னமாக வழங்க கோரினாராம் ரஜினி. அதற்கு தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

நடிகர் ரஜினிகாந்த் அரசியல் பற்றிய தனது அறிவிப்பினை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார், ஜனவரியில் கட்சித் துவக்கம், டிசம்பர் 31ல் தேதி அறிவிப்பு என தெரிவிக்கப்பட்டு உள்ளது. #மாத்துவோம்_எல்லாத்தையும்_மாத்துவோம் #இப்போ_இல்லேன்னா_எப்பவும்_இல்ல என்ற ஹேஷ்டாக்குகளும் இடம் பெற்று இருந்தன.

வர போகிற சட்டசபை தேர்தலில் மக்களுடைய பேராதரவுடன் வெற்றி பெற்று தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, ஜாதி மத சார்பற்ற ஆன்மீக அரசியல் உருவாகுவது நிச்சயம். அற்புதம்… நடக்கும், அதிசயம்… நிகழும்!!! என்றும் தெரிவித்து இருந்தார். ரஜினிகாந்த் தமிழருவி மணியனுக்கு மேற்பார்வையாளர் பதவியும், அர்ஜூன மூர்த்திக்கு தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவியும் அளித்துள்ளார்.

நீ செத்துத் தொலை’ சித்ராவை தற்கொலைக்கு தூண்டிய ஹேம்நாத்!!

கட்சி தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டு வந்தநிலையில் நடிகர் ரஜினிகாந்த் ‘மக்கள் சேவை கட்சி’ என்ற பெயரில் புதிய கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 234 தொகுதிகளிலும் மக்கள் சேவை கட்சிக்கு ஆட்டோ சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மக்கள் சேவை கட்சி தலைவரின் முகவரி ஆணைய பதிவேட்டில் சென்னை எர்ணாவூர் என உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here