Thursday, May 2, 2024

மு.க ஸ்டாலின் மீது போடப்பட்ட 4 வழக்குகள் ரத்து – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!!

Must Read

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீது தமிழக அரசு போடப்பட்ட 4 வழக்குகளை சென்னை உயர்நீதி மன்றம் ரத்து செய்தது. பொதுவாழ்வில் உள்ளவர்கள் விமர்சனைங்களை ஏற்க சகிப்பு தன்மை வரவேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது.

திமுக தலைவர் மீது வழக்கு:

உள்ளாட்சி துறை ஊழல் துறையாக மாறிவிட்டது எனவும், அதில் உள்ள அரசு அதிகாரிகள் அனைவரும் ஊழலுக்கு துணை போய் இருப்பதாகவும், எம் சாண்ட் வாங்கியதில் ஆயிரம் கோடி ஊழல் நடந்திருப்பதாகவும், இது தொடர்பாக முறையான விசாரணை நடத்த வேண்டும் எனவும் திமுக தலைவர் ஸ்டாலின் கடந்த ஆண்டு செப்டம்பர் 4 ஆம் தேதி முரசொலியில் அறிக்கை வெளியிட்டு இருந்தார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் மாநகராட்சி டெண்டர் முறைகேடுகளை மக்களுக்கு தெரியப்படுத்தியதால், அவர் மீது அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. எனவே தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய கோரி திமுக தலைவர் மு.க ஸ்டாலின் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

தமிழகத்தை உலுக்கிய சின்னத்திரை பிரபலங்கள் தற்கொலை – தொடரும் சோகக்கதை!!

தற்போது திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த 4 அவதூறு வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. ஜெயலலிதா குறித்து தெரிவித்த கருத்து தொடர்பான வழக்கு உள்ளிடவை ரத்து செய்யப்பட்டது. பொது வாழ்வில் உள்ளவர்கள் விமர்சனங்களை ஏற்கக்கூடிய சகிப்புத்தன்மை வேண்டும் என உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. அரசியல் கட்சி தலைவர்கள் தீவிரமான தனிப்பட்ட விமர்சனங்களை தவிர்க்க வேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல் செய்துள்ளது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

TET தேர்வர்களே., பேப்பர் 1 & 2 தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான புக் மெட்டீரியல்., மிஸ் பண்ணிடாதீங்க!!

TET தேர்வர்களே., பேப்பர் 1 & 2 தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான புக் மெட்டீரியல்., மிஸ் பண்ணிடாதீங்க!! தமிழ்நாடு அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரியவும், பதவி உயர்வுக்கும்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -